மகனை பறிகொடுத்த டேனியல் பாலாஜி அம்மா.. ஆறுதல் சொல்லி தேற்றிய முரளியின் மனைவி.. கூடவே அதர்வா!
சென்னை: பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். கெளதம் மேனன், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, அமீர், பவன், அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நடிகைகள் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் சோஷியல் மீடியாவில் டேனியல் பாலாஜியை நினைத்து உருகி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஆன்மிகவாதியாகவே வாழ்ந்து வந்த டேனியல் பாலாஜி ஆவடியில் அங்காள பரமேஸ்வரி கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.
டேனியல் பாலாஜி மரணம்: கடந்த மார்ச் 29ம் தேதி இரவு 11 மணியளவில் டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவருடன் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவரது மூச்சு நின்று விட்டது. சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவர் உயிர் பிழைக்காத நிலையில், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். நள்ளிரவே டேனியல் பாலாஜியின் மறைவு ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முரளியை போலவே: அண்ணன் உறவு முறையான நடிகர் முரளி 46 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததை போலவே 48 வயதில் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தியை அறிந்து அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மறைந்த நடிகர் முரளியின் மனைவி ஷோபா தனது மகன்கள் அதர்வா மற்றும் ஆகாஷ் உடன் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அத்தைக்கு ஆறுதல்: மகனை பறிகொடுத்து கதறியழுத டேனியல் பாலாஜியின் அம்மாவுக்கு முரளியின் மனைவி ஷோபா ஆறுதல் சொல்லி தேற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகர் அதர்வாவும் பாட்டிக்கு ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளார். சித்தப்பாவின் உடலை பார்த்து அவர் அருகிலேயே கண்கலங்கி வெகு நேரம் நின்ற அதர்வா இறுதிச்சடங்குகளிலும் கலந்து கொண்டார்.
முரளி மனைவி: நடிகர் முரளியை 1987ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஷோபாவிற்கு அதர்வா, காவ்யா மற்றும் ஆகாஷ் என மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆகாஷ் மற்றும் காவ்யாவுக்கு திருமணம் செய்து வைத்த ஷோபா இன்னமும் அதர்வாவுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











