நான் நீங்களாகிவிட்டேன்.. நீங்கள் குட்டி சேது ஆகிவிட்டீர்கள்.. மறைந்த நடிகர் சேதுவின் மனைவி உருக்கம்!

சென்னை: மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமையால் தனது கணவர் குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Sethuraman Wife shared sethu's Last Video | Uma Sethuraman | Zi Clinic

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.

ஒரு பெண் குழந்தை

ஒரு பெண் குழந்தை

இந்நிலையில் இளம் நடிகரான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சேதுராமனுக்கு உமையாள் என்ற மனைவியும் ஒன்றரை வயதில் சகானா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளன.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு சேது அகால மரணமடைந்தார். இந்நிலையில் சேது இறக்கும் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த உமையாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

உமையால் உருக்கம்

உமையால் உருக்கம்

சேதுவே மீண்டும் பிறந்து வந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் கூறி வந்தனர். இந்நிலையில் நடிகர் சேதுவின் மனைவியான உமையால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சேதுராமன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நீங்கள் என்ன இல்லை

நீங்கள் என்ன இல்லை

நான் என்ன, நீங்கள் என்ன இல்லை என்ற தலைப்பில் அவர் பதிவிட்டிருப்பதாவது,

  • நான் ஆச்சரியங்களை விரும்புகிறேன் - நீங்கள் ஆச்சரியங்களை வெறுக்கிறீர்கள்
  • நான் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறேன் - நீங்கள் அவற்றை எளிமையாக வைத்திருக்கிறீர்கள்
  • நான் வீட்டில் சாப்பிடுவதை விரும்புகிறேன் - நீங்கள் வெளியே சாப்பிடுவதை விரும்புகிறீர்கள்
  • நான் தூங்கும்போது விஷயங்களை மறந்துவிட்டு எழுவேன் - நீங்கள் தூங்கும்போதும் எழுந்ததும் விஷயங்களை நினைவில் வைத்திருப்பீர்கள்
  • உங்களை ரிலாக்ஸ் செய்ய நான் விரும்புகிறேன் - நீங்கள் ரிலாக்ஸாக இருக்க விரும்புகிறீர்கள்
  • அழுவதற்கு உங்கள் தோள்களை நான் தேடுகிறேன் நீங்கள் சிரித்து என் கண்ணீரைத் துடைக்கிறீர்கள்
  • எல்லாம் சரி என்று என்னால் நடிக்க முடியும் - உண்மையில் ஒரு சிறிய விஷயம் சரியாக இல்லாவிட்டாலும் உங்களால் நடிக்க முடியாது
  • பெரிய முடிவுகள்

    பெரிய முடிவுகள்

    • நான் சிறிய முடிவுகளை எளிதாக எடுக்கிறேன் - நீங்கள் மிகப்பெரிய முடிவுகளை எளிதாக எடுக்கிறீர்கள்
    • மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் காரியங்களைச் செய்கிறேன் - உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் காரியங்களைச் செய்கிறீர்கள்
    • விஷயங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது நீங்கள் என்னை உணர வைக்கும் விதத்தை நான் விரும்புகிறேன் - உங்கள் காரியங்களைச் செய்ய நான் உங்களுக்கு இடம் கொடுக்கும்போது உங்களுக்கு பிடிக்கும்
    • நான் உங்களுடன் ஷாப்பிங் செய்ய விரும்புகிறேன் நீங்கள் தனியாக ஷாப்பிங் செய்ய விரும்புகிறீர்கள் ( ஏனெனில் ஏற்கனவே நீங்கள் வாங்கிய அதே சட்டை உங்களிடம் உள்ளது என்பது உங்களுக்கு நினைவிருக்காது)
    • நான் காரியங்களை மெதுவாக செய்கிறேன் - நீங்கள் மின்னல் வேகத்தில் காரியங்களைச் செய்கிறீர்கள்
    • இதயத்தை கேட்கிறேன்

      இதயத்தை கேட்கிறேன்

      • ஏதாவது செய்வதற்கு முன்பு நான் யோசிக்கிறேன், என் மனதைக் கேட்கிறேன் - நீங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் இதயம் சொல்வதைச் செய்கிறீர்கள்
      • நான் போட்டோக்களை எடுக்க விரும்புகிறேன்- நீங்கள் அதற்கு போஸ் கொடுக்க விரும்புகிறீர்கள்
      • நான் உணர்ச்சி ரீதியாக வலிமையானவள் - உணர்ச்சிகள் உங்களை பலவீனப்படுத்தக்கூடும் என்பதால் நீங்கள் விரும்புவதில்லை
      • இனிப்புகள் வேண்டாம் என்று நான் சொல்கிறேன் - நீங்கள் ஒருபோதும் இனிப்புகளை வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள் (எஸ்பெஷலி காஜு கத்லி)
      • ஒரு நிமிடத்தில் எனது உணவை என்னால் சாப்பிட்டுவிட முடியும் - நீங்கள் ஒவ்வொரு பிட்டையும் ருசித்து சாப்பிடுவீர்கள், ரெஸ்டாரென்டிலோ அல்லது வீட்டிலோ உணவை அனுபவித்து சாப்பிட விரும்புகிறீர்கள்
      • உங்களுடன் கழிப்பேன்

        உங்களுடன் கழிப்பேன்

        • நான் விஷயங்களை எனக்குள்ளேயே வைத்திருக்கிறேன் - உங்கள் மனதில் இருப்பதை அடுத்த நிமிடத்தில் பகிராமல் உங்களால் இருக்க முடியாது.
        • நான் விழித்திருந்து எழுத விரும்புகிறேன் - நீங்கள் தூங்கி கனவு காண விரும்புகிறீர்கள்
        • நான் உங்களை நேசிக்கிறேன் - நீங்கள் சஹானாவை நேசிக்கிறீர்கள்
        • நான் இப்போது நீங்கள் ஆகிவிட்டேன் - நீங்கள் சிறிய சேது ஆகிவிட்டீர்கள். நான் உங்களுடனும் சஹானாவுடனும் ஒவ்வொரு நாளையும் கழிப்பேன்..
        • லவ் உமா சேதுராமன்.. இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார் சேதுவின் மனைவி உமையாள்.

          மகிழ்ச்சியாக இருங்கள்

          மகிழ்ச்சியாக இருங்கள்

          அவரது இந்த பதிவை பலரும் லைக் செய்துள்ளனர். சிலர் உங்களை போன்ற மனைவி கிடைக்க சேதுராமன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் சேதுதான் உங்கள் வயிற்றில் உங்களுக்கு மகனாக பிறந்திருக்கிறார் என்றும் உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X