Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மறைந்த இளம் நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்!
சென்னை: மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
இளம் நடிகரான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா? பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்!
அண்ணாநகரில் கிளினிக்
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன் திரைத்துறைய சேர்ந்த பலருடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். தோல் சிகிச்சை நிபுணரான சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.
ஒரு பெண் குழந்தை
சேதுராமன் 2016ஆம் ஆண்டு திருமணம் உமையால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒன்றரை வயதில் சகானா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு சேது அகால மரணமடைந்தது பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
சந்தானத்தின் நண்பர்
நாடு முழுக்க கொரோனா வைரஸால் பொது முடக்கம் அமலில் இருந்ததால் அவரது இறுதிச்சடங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போனது. நடிகர் சந்தானம் தனது நண்பரான சேதுராமனின் உடலை கதறியப்படியே சுமந்து சென்றார். திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்தனர்.
ஆண் குழந்தை
இந்நிலையில் அவரது மனைவி உமையாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் சேதுராமன் மரணமடைந்த போது அவரது மனைவி உமையால் கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குடும்பத்தினர் உருக்கம்
மறைந்த நடிகர் சேது ராமனே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உமையாலுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஜாங்கிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மீண்டும் வந்து விட்டார்.. நீங்கள் உங்கள் வயதைதான் மாற்றியிருக்கிறீர்கள்.
குட்டி சேது
நாங்கள் உங்களை குட்டி சேது என்றே அழைப்போம்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.. என பதிவிட்டுள்ளார். நடிகர் சேதுவுக்கு மகன் பிறந்த தகவலை அறிந்து ரசிகர்களும் சேதுவே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.