பக்கத்துல இருந்து பார்த்தீங்களா?.. பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கிய பிரபல நடிகரின் மனைவி.. செம விஷயம்
சென்னை: பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசிவருபவர். அவர் பேசுவதில் எதுவுமே உண்மை இல்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அவர் தொடர்ந்து அப்படி பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் மறைந்த நடிகர் சுருளிராஜன் குறித்து வழக்கம் போல் கதை கிளப்பினார் பயில்வான். இப்போது அதற்கு சுருளி ராஜனின் மனைவி பதிலடி கொடுத்திருக்கிறார்.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
தொடர் பஞ்சாயத்து: பயில்வான் ரங்கநாதன் இப்படி பேசுவதை பல செலிபிரிட்டிகள் கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர். ஆனால் ரேகா நாயர், கே.ராஜன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் மட்டும் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுகின்றனர். முக்கியமாக ரேகா நாயர் நேரடியாக சண்டைக்கே சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விஷால் பதிலடி: அதேபோல் ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பயில்வான் ரங்கநாதன் ஏதோ ஒரு கேள்வியை கேட்டு வைக்க; 'அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது' என்று மேடையில் அமர்ந்தபடியே மூக்குடைத்தார் விஷால். அதுமட்டுமின்றி பிசாசு பட சமயத்தின்போதும் இயக்குநர் பாலா பயில்வான் ரங்கநாதனுக்கு தரமான பல்பு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் பயில்வான் ரங்கநாதனின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.
சுருளிராஜன் பற்றி: சூழல் இப்படி இருக்க மறைந்த நடிகர் சுருளி ராஜன் பற்றி வழக்கம்போல் கதை கிளப்பினார் பயில்வான் ரங்கநாதன். அதாவது, சுருளி ராஜன் 42 வயதில் உயிரிழப்பதற்கு மதுப்பழக்கம்தான் காரணம். அவரிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் வெளிநாட்டு மது வாங்கிக்கொடுத்தால் போதும். அவரை எப்படியாவது குணம் செய்ய வேண்டுமென்று எம்ஜிஆர் வெளிநாட்டிலிருந்து மருந்துகள் வாங்கிக்கொடுத்தார் என்று கூறியிருந்தார்.
பஞ்சரான பயில்வான்: இந்நிலையில் பயில்வானின் இந்தப் பேச்சுக்கு சுருளி ராஜனின் மனைவி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பேசுகையில், எனது கணவர் மதுப்பழக்கத்த்தால்தான் உயிரிழந்தார் என்று யார் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் என்ன பக்கத்தில் இருந்து பார்த்தீர்களா இல்லை எங்கள் குடும்பத்திலிருந்து பார்த்தீர்களா. எதுவுமே தெரியாமல் வருமானத்துக்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா" என்று காட்டமாக பேசியிருக்கிறார். முன்னதாக சுருளி ராஜன் தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார். ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











