சுஷாந்த் 'அதற்கு' அடிமையாக இருந்தார்.. முன்னாள் பாடிகார்டு பகிர்ந்த பகீர் தகவல்!
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சராஸ் எனும் போதை பொருளுக்கு அடிமையாக இருந்ததாக அவரது முன்னாள் பாதுகாவலர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.
குறிப்பாக அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி மீதான குற்றச்சாட்டுக்களும் அவர் செய்த சதி வேலைகள் தொடர்பான ஆதாரங்களும் வெளியாகி சுஷாந்த் வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

ரியாதான் காரணம்
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே தெரியாமல் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உட்கொண்டது ரியாவின் வாட்ஸ் அப் சாட்டின் மூலம் அம்பலமானது. சுஷாந்த்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர் சுஷாந்துக்கு போதை மருந்துகளை கொடுத்து வந்ததாக சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ரியா மீது வழக்குப்பதிவு
சுஷாந்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை மருந்தை கொடுத்து அவரை ரியா கொன்றுவிட்டார். அவர் தான் கொலையாளி என்றும் சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே போதை தடுப்பு பிரிவினர் ரியா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் பாதுகாவலர்
இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சுஷாந்தின் முன்னாள் பாதுகாவலரான முஸ்தாக், சுஷாந்த் சராஸ் மற்றும் மரிஜுவானா போதை பொருளுக்கு தீவிர அடிமையாகி இருந்தார் என தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த போதை மருந்து
இந்தியா டுடே ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த முஸ்தாக் இந்த பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அதோடு பல விலை உயர்ந்த போதை மருந்துகளை பார்ட்டிகளில் பங்கேற்ற போதும் கார்களில் செல்லும் போதும் சுஷாந்த் உட்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

சமையல்காரர்
ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சுஷாந்திடம் பர்சனல் செக்யூரிட்டியாக இருந்த முஸ்தாக், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அந்த வேலையை விட்டுள்ளார். முன்னதாக சுஷாந்த் வீட்டின் சமையல்காரரான நீரஜ், சுஷாந்துக்கு புகைக்க மரிஜுவானாவை சுருட்டி கொடுத்ததாக கூறியிருந்தார்.

வீட்டில் நடக்கும் பார்ட்டியில்
மேலும் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது மேனேஜர் இடையிலான வாட்ஸ் அப் சேட்டிலும் சுஷாந்த் தடை செய்யப்பட்ட போதை பொருளை உட்கொண்டது தெரியவந்தது. இந்நிலையில் வீட்டில் நடக்கும் பார்ட்டியிலும் ஐந்து ஆறு பேருடன் சேர்ந்து சுஷாந்த் கஞ்சா மற்றும் சராஸ் புகைப்பார். அது மிகவும் விலையுயர்ந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றும் முஸ்தாக் கூறியுள்ளார்.

நிதானத்தை இழப்பார்
சுஷாந்தின் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது. படப்பிடிப்புகளில் இருக்கும்போது, அவர் எதையாவது கேட்பார், அது கிடைக்கவில்லை என்றால் அவர் நிதானத்தை இழப்பார். அவரது மூடை பொறுத்து திடீரென ஷூட்டிங்கை ரத்து செய்வார். இது பல முறை நடந்தது. செட்டிலும் கூட இது நடந்தது என்றும் முஸ்தாக் கூறியுள்ளார்.

காரணமே இல்லாமல்
தனது ஒன்பது மாத வேலை நேரத்தில், ராஜ்புத் நான்கு ஐந்து தனிப்பட்ட ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பியுள்ளார். எந்தவிதமான தவறும் செய்யாமல் திடீரென மக்களை பணிநீக்கம் செய்துள்ளார் என்றும் சுஷாந்தின் முன்னாள் பாதுகாவலரான முஸ்தாக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











