கடைசியாக சுஷாந்த் பேசியது என்ன? 2 மாதங்களுக்குப் பிறகு மனம் திறந்த சகோதரி.. உருக வைக்கும் உரையாடல்!

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னிடம் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அவருடன் இருந்த சகோதரி மீத்து சிங் மனம் திறந்துள்ளார்.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மரணம் முதலில் தற்கொலை என கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

மனம் திறந்த சகோதரி

மனம் திறந்த சகோதரி

இதனை தொடர்ந்து நடிகர் சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் அவரது சகோதரியான மீத்து சிங், சுஷாந்த் சிங்கை கடைசியாக பார்த்த போது அவர் என்ன பேசினார்? எப்படி இருந்தார் என்பது குறித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

அவரை சந்தித்தேன்

அவரை சந்தித்தேன்

அவர் பேசியிருப்பதாவது, ஜூன் 8, ஆம் தேதி காலை, என் சகோதரர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவரைச் சந்திக்க வரும்படி அவர் என்னிடம் கேட்டார். நான் மாலை 5:30 மணிக்கு அவரை சந்திக்க சென்றேன்.

தென்னிந்தியாவுக்கு...

தென்னிந்தியாவுக்கு...

நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை சந்திக்க சென்றபோது, ​​அவர் அமைதியாக இருந்தார். என்ன நடந்தது என்று நான் கேட்டபோது, லாக்டவுன் காரணமாக எங்கும் செல்ல முடியாது, இதனால் போரடிக்கிறது என்று என்னிடம் கூறினார். மேலும் லாக்டவுன் முடிந்ததும், நாம் தென்னிந்தியாவுக்கு செல்வோம் என்று அவர் என்னிடம் கூறினார்.

தங்க சொன்னார்..

தங்க சொன்னார்..

சுஷாந்தை சந்தித்த பிறகு, என்னுடன் சிறிது நேரம் காத்திருந்து தங்கும்படி கேட்டார். நான் சிறிது நேரம் தங்கியிருந்தேன், நான் சுஷாந்துடன் இருந்தபோது, ​​அவருடைய விருப்பப்படி உணவை சமைப்பேன், அவருடன் அரட்டையடித்தேன், லாக்டவுன் முடிந்ததும் தென்னிந்தியாவை சுற்றிப்பார்ப்பது குறித்து விவாதித்தோம்.

மெஸேஜ் அனுப்பினேன்

மெஸேஜ் அனுப்பினேன்

ஜூன் 12, 2020 அன்று, என் மகள் கோரேகானில் தனியாக இருந்ததால், மாலை 4:30 மணிக்கு எனது கோரேகான் வீட்டிற்குச் சென்றேன். நான் எனது வீட்டிற்குச் சென்ற பிறகு, நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினேன், ஆனால் அவர் எனக்கு போன் செய்யவும் இல்லை, திரும்ப அழைக்கவும் இல்லை.

ஜூன் 14ஆம் தேதி..

ஜூன் 14ஆம் தேதி..

ஜூன் 14 ஆம் தேதி அன்று, நான் காலை 10:30 மணிக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போன் செய்தேன். ஆனால் அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, அவருடன் வசித்து வந்த சித்தார்த் பிதானிக்கு போன் செய்தேன்.

சித்தார்த் பிதானி

சித்தார்த் பிதானி

சுஷாந்துக்கு மாதுளை ஜூஸ் கொடுத்தாக சொன்னார். மேலும் அவர் தூங்கிக்கொண்டிருக்கலாம் என்றார். அப்போது அவர் கதவைத் தட்டினார், ஆனால் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. சுஷாந்த் எப்போதும் உள்ளே பூட்ட மாட்டார். ஆகையால் மீண்டும் கதவை தட்டுமாறு அவரிடம் கூறினேன். மேலும் நான் கால் செய்ததாக சொல்லும்படியும் கூறினேன்.

கதவை திறக்கவில்லை..

கதவை திறக்கவில்லை..

சிறிது நேரம் கழித்து, சித்தார்த் என்னிடம் பல முறை சுஷாந்த் சாரின் பெட் ரூம் கதவைத் தட்டியதாகச் சொன்னார், ஆனால் அவர் கதவைத் திறக்கவில்லை, எனவே அவர்கள் கீமேக்கரை அழைக்கப் போவதாக கூறினார். சித்தார்திடமிருந்து அழைப்பு வந்த பிறகு, நான் உடனடியாக கோரேகானில் இருந்து வண்டியில் பாந்த்ராவுக்கு புறப்பட்டேன்.

தலை கீழாக கிடந்தார்

தலை கீழாக கிடந்தார்

டாக்ஸியில் இருந்து வரும்போது, சித்தார்த்திடமிருந்து எனக்கு மீண்டும் ஒரு போன் கால் வந்தது, அவர் கதவைத் திறந்துவிட்டார், சுஷாந்த் தனது சீலிங் ஃபேனில் தூக்கில் தொங்குவதாக கூறினார். நான் அவரது வீட்டை அடைந்தபோது, சுஷாந்த் படுக்கையில் தலைகீழாக படுத்துக் கொண்டிருப்பதையும், சீலிங் ஃபேனில் பச்சை நிற குர்தா தொங்குவதையும் பார்த்தேன்.

சகோதரிகளுக்கு தகவல்

சகோதரிகளுக்கு தகவல்

சித்தார்த் மற்றும் அவரது உதவியாளர்கள் குர்தாவை கத்தியால் அறுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைக் கொண்டு வந்தனர். மேலும், போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பாந்த்ரா போலீசார் அங்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து எனது சகோதரிகளுக்கு சொன்னேன்.. இவ்வாறு சுஷாந்தின் சகோதரி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X