விஜயகாந்த் மகன்கள் எங்கே போயிருக்காங்க பாருங்க.. குடும்பத்துடன் கும்பமேளாவில்.. ஃபோட்டோஸ் ட்ரெண்டிங்

சென்னை: விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் உயிரிழந்த பிறகுதான் அவரை வெறுத்தவர்களும் அவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். முதலாம் ஆண்டு நினைவு தினத்துக்குக்கூட விஜயகாந்த்தின் சமாதியில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் விஜயகாந்த்தின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கேப்டன் விஜயகாந்த் என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு கிளம்பி வந்தவர் தனது திறமை, உழைப்பு, காத்திருப்பு உள்ளிட்டவைகளால் ரஜினிகாந்த், கமல் ஹாசன் பீக்கில் இருந்தபோதே ஹீரோவாக அறிமுகமானார். இரு பெரும் துருவங்களுக்கு மத்தியில் நுழைந்த அவர் தனக்கென தனியிடத்தை பிடித்தார். முக்கியமாக கிராமத்து பக்கங்களில் அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.

Vijayakanth Tamil Cinema Kollywood

தொடர் ஹிட்டுகள்: முதலில் வில்லனாக அறிமுகமான அவர் அடுத்தது ஹீரோவாக மாறினார். ஹீரோவாக மாறி வரிசையாக ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டிருந்தார். மேலும் தமிழ் சினிமா ஹீரோக்களிலேயே 100ஆவது படம் ஒரு ஹீரோவுக்கு மெகா ஹிட்டானது என்றால் அது விஜயகாந்த்துக்கு மட்டும்தான். கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் விஜயகாந்த்: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் சினிமாவில் பீக்கில் இருந்தபோது உள்ளே நுழைந்து விஜயகாந்த் எப்படி தன்னை நிரூபித்தாரோ; அதேபோல் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியலில் உச்சத்தில் இருந்தபோது தேமுதிக கட்சியை தொடங்கி கெத்து காண்பித்தார் விஜயகாந்த். முக்கியமாக 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். அந்த சமயத்தில் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை தைரியமாக எதிர்த்து பேசினார். ஆனால் அதற்கு பிறகு காட்சிகள் மாறின.

உயிரிழந்த விஜயகாந்த்: அந்த சம்பவத்துக்கு பிறகு விஜயகாந்த்திடமிருந்து அவரது எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்றார்கள். அதனை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தொடர்ந்து அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் பழைய விஜயகாந்த்தை பார்க்க முடியவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த 2023ஆம் ஆண்டு அவர் சென்னையில் உயிரிழந்தார்.

கும்பமேளாவில் குடும்பம்: அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜயகாந்த்தின் குடும்ப புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அவரது மனைவி, இரண்டு மகன்கள், மைத்துனர் உள்ளிட்டோர் கும்பமேளாவுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது கங்கை நதியில் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் நீராடிய புகைப்படங்களும்; கும்பமேளாவில் குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சண்முகபாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X