Divya Bharathi: உயிர்பலி வாங்கிய பால்கனி.. திவ்யா பாரதி மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

சென்னை : சென்னை : 14 வயதிலேயே நடிக்க வந்து தனது அழகால் இந்திய சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் தான் நடிகை திவ்யா பாரதி.

1993 ஆம் ஆண்டு, தனது 19வது வயதில் தான் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட திவ்யா பாரதியின் மரணம் இன்று வரை பலருக்கும் பெரும் மர்மமாகத்தான் தான் உள்ளது.

பாலிவுட்டில் பேரழியாக இருந்த நடிகை திவ்யா பாரதியின் மரணத்தில் மறைந்திருக்கும் பல விஷயங்களை நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.

late bollywood actress divya bharathi real story

ஒரு சிலர் திவ்யா பாரதியின் காதலர் அவரை விட்டு சென்றதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர ஒருசிலர் அவருக்கு அதிகமான மன அழுத்தம் கொடுத்ததாகவும் செய்திகள் உலா வந்தன.

யூடியூப் சேனலில் : இந்நிலையில் மூத்த நடிகை குட்டி பத்மினி தனது யூடியூப் சேனலில் திவ்யா பாரதி பற்றி பேசி இருக்கிறார். அதில பலர் திவ்யா பாரதி பற்றி அவ்வளவாக தெரியாது. இருந்தாலும் மும்பையில் அவரை பற்றி விசாரித்தேன் அவர் சொன்ன தகவல்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

late bollywood actress divya bharathi real story

அழகான டால் : நடிகை திவ்யா பாரதி க்யூடான அழகான டால் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு ஸ்ரீ தேவியை விட அழகு. 17வயதில் சினிமாவிற்கு வந்த திவ்யா பாரதி இரண்டே வருடத்தில் இரவு பகலாக 22 படங்களில் நடித்திருக்கிறார். தமிழ்,தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்தார்.

காதல் திருமணம் : சினிமாவில் பிரபலமாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே தயாரிப்பாளரின் மகன் சாஜித் அடியட்வாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால், திரைப்படங்களில் நடிக்காமல் விலகி குடும்பம் கணவன் வாழ்க்கையை தொடங்கிய திவ்யா பாரதி, மது அருந்திவிட்டு வீட்டு ஜன்னலின் அருகே அமர்ந்து கொண்டிருந்த போது தவறி விழுந்த உயிரிழந்துவிட்ட சொல்லப்படுகிறது.

late bollywood actress divya bharathi real story

மரணத்தில் சந்தேகம் : ஆனால், திவ்யா பாரதி தவறிவிழுந்து உயிரிழந்து இருக்க வாய்பே இல்லை என்றும், ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யா பாரதியை அருகில் இருக்கும் மருத்துவனையில் அனுமதிக்காமல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என்றும், மனைவி இறந்த செய்தி தெரிந்தும் அவரது கணவர் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம் என்றும் பலவிதமான சந்தேகங்கள் திவ்யா பாரதியின் மரணத்தில் தற்போது வரை இருக்கிறது என குட்டிபத்மினி பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X