சாந்தனுவை கைவிட்டுடாதீங்க.. என் கண்கள் உங்களைப் பார்க்கும்.. பாக்யராஜின் இறுதி கடிதம்!

சென்னை: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமான சோகத்தில் இருந்து இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில், அவரது கைப்பட எழுதப்பட்டது போன்ற ஒரு உருக்கமான இறுதி அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் நெகிழ வைத்துள்ளது. அவரது லெட்டர் பேடில், அவரது கையெழுத்துடன் வெளியாகியுள்ள அந்த இரண்டு பக்கக் கடிதத்தில் உள்ள விபரங்கள் இதோ:

பாக்யராஜ் இறுதி கடிதம்: "சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது" நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன். அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக!

பார்வையாய் இருப்பேன்: அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைத்தட்டல் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். "இருக்கிறேன்" - பார்த்தீர்களா? இன்னும்..... கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் - பார்வையாய்.

Bhagyaraj Letter Shanthnu
Photo Credit:

வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரக பிரவேசம் செய்துவிடும்.எஞ்சியவது கொஞ்சமாய் அஸ்தியும், மிகுமஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது. Thanks! நன்றி சொல்வது மனித இயல்பு, நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே.
இனி நான்....
நல்ல சினிமாவில்,
நல்ல திரைக்கதையில்,
நல்ல வசனத்தில்,
நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்!
அன்புடன்
உங்கள் (கே.பாக்யராஜின் கையெழுத்து வெளியாகி ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது. தன் மரணத்திற்குப் பிறகும் தனது கண்கள் மூலம் உலகைப் பார்க்கப் போவதையும் (அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு), 'expiry date குறிக்கப்படாத உடல் இது' எனத் தனது பாணியில் தத்துவார்த்தமாக எழுதியுள்ளதும் ரசிகர்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X