ஆச்சர்யம் ஆனால் உண்மை... ‘கோச்சடையானில்’ மறைந்த நடிகர் நாகேஷ் நடித்துள்ளாராம்.

சென்னை: ரஜினியின் 'கோச்சடையான்' படத்தில் மறைந்த நடிகர் நாகேஷையும் தொழில்நுட்ப உதவியுடன் நடிக்க வைத்துள்ளனராம். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா... கோச்சடையான் படத்தை 'பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங்' என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கியிருக்கிறார்களாம்.

அதன் மூலம் மறைந்த நடிகர் நாகேஷ் கோச்சடையானில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறாராம். பழைய காட்சிகளை வைத்து அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

சௌந்தர்யா இயக்கத்தில் அவரது அப்பாவும், சூப்பர்ஸ்டாருமான ரஜினி காந்த் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'கோச்சடையான்'. இப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராப், ஷோபனா, சரத்குமார், ருக்மிணி, ஆதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அதான் நாகேஷ்....

அதான் நாகேஷ்....

இவர்களுடன் முக்கிய வேடத்தில் மறைந்த நடிகர் நாகேஷும் நடித்துள்ளாராம். நாகேஷ் நடித்த பழைய படங்களின் காட்சிகளை வைத்து அவரை கோச்சடையானில் ஒரு கதாபாத்திரமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா.

இந்திய சினிமாவில் முதன்முறையாக...

இந்திய சினிமாவில் முதன்முறையாக...

இறந்த பிறகும் ஒருவரை புதிதாக பார்ப்பது இந்திய சினிமாவில் இதுவே முதல்முறை. தொழில்நுட்பம் அதனை சாதித்துள்ளது' என தெரிவித்துள்ளார் சௌந்தர்யா.

இசை வெளியீடு...

இசை வெளியீடு...

கோச்சடையான் இசைவெளியீடு வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் கலந்து கொள்கிறார்.

யு சான்றிதழ்...

யு சான்றிதழ்...

கோச்சடையான் பட டிரைலருக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகும் கோச்சடையானை இம்மாதம் மூன்றாவது வாரம் சென்சாருக்கு அனுப்பத் திட்டமிடப் பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X