அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகும் சுல்தான் படக்குழு...நாளை மற்றொரு பாடல் ரிலீஸ்
சென்னை : பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் இரண்டு சிங்கிள் டிராக் பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட, யாரையும் இவளோ அழகா பார்க்கல என துவங்கும் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலை சிம்பு பாடி இருந்தார். வெளியிட்ட ஒரே நாளில் இப்பாடல் ஆயிரக்கணக்கில் பார்வைகளை அள்ளியது.
இந்நிலையில் சுல்தான் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் பாடலை நாளை வெளியிட உள்ளனர். எப்படி இருந்த நாங்க என துவங்கும் இந்த பாடலை நாளை மாலை 5.30 மணிக்கு யூட்யூப் உள்ளிட்ட தளங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இந்த பாடலும் மிகப் பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை ரிலீஸ் செய்ய இன்னும் 15 நாட்களே உள்ளதால் விரைவில் படத்தின் டீசரும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், பொழுதுபோக்கு நிறைந்த குடும்ப படமாக இதை உருவாக்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











