சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ... ஃபேஸ்புக்கில் ரிலீஸ்!
சென்னை: தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படம் பேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் பிறந்த நாள் வந்தது. அதற்கு முன்பாக ஹன்சிகாவுக்கு என்ன மாதிரி பரிசுப் பொருள் வழங்குவது என்பதில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சிம்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
பின்னர் ஹன்சிகாவின் பிறந்த நாளன்றும் 'இளவரசி' என்றெல்லாம் வர்ணித்திருந்தார் சிம்பு.
இந்த நிலையில் பார்ட்டி ஒன்றில் சிம்புவும் தாமும் கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் பிறந்த நாள் வந்தது. அதற்கு முன்பாக ஹன்சிகாவுக்கு என்ன மாதிரி பரிசுப் பொருள் வழங்குவது என்பதில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சிம்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே இன்று புதன்கிழமை ஹன்சிகா, அந்தப் படத்தை யார் வெளியிட்டது என்பது குறித்து போலீசில் புகார் செய்யப் போவதாக கூறியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அப்ப 'ஹன்சிகா' பெயரில் உலவ விடப்பட்டிருக்கும் இந்தப் பக்கம் உண்மை அல்ல எனில் போலீஸில் இந்த பக்கத்தை உருவாக்கிய 'கறுப்பு ஆடு' பற்றியும் அவர் புகார் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் ஹன்சிகாவும், சிம்புவும் தனித்து இருந்த போது இருவரும் போஸ் கொடுத்து படம் எடுக்க வைத்த 'கறுப்பு ஆடுதான்' ரிலீஸ் செய்திருக்க வேண்டும்!


Click it and Unblock the Notifications











