twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுவரை இப்படி இல்லையாமே... தமிழில் வசூல் அள்ளும் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் படங்கள்

    By
    |

    சென்னை: சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்கள், தமிழகத்தில் வசூல் அள்ளிவருவதாகக் கூறப்படுகிறது.

    பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு, முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழுக்கும் வந்தார்.

    அவர் நடித்த தெலுங்கு படங்கள் நேரடியாக முதலிலும் பிறகு டப் செய்யப்பட்டும் தமிழில் ரிலீஸ் ஆவது வழக்கம். இவர் படங்களுக்கு எப்போதும் தமிழில் மவுசு உண்டு.

    ராஷ்மிகா மந்தனா

    ராஷ்மிகா மந்தனா

    இவர் நடித்து கடந்த 11 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம், சரிலேரு நீக்கெவ்வரு. இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, 13 வருடத்துக்குப் பிறகு இதில் நடித்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கியுள்ள இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர்.

    பூஜா ஹெக்டே

    பூஜா ஹெக்டே

    இதே போல, அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'அலா வைகுந்தபுரம்லோ' படம் கடந்த 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின், ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், ஆந்திரா மற்றும் தெலுங்கா னாவில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

    நேரடி ரிலீஸ்

    நேரடி ரிலீஸ்

    இந்த இரண்டு படங்களும் தமிழகத்தில் டப் ஆகாமல், நேரடியாக அங்கு ரிலீஸ் ஆன அதே தேதியில் ரிலீஸ் ஆகின. இந்தப் படங்கள் முந்தைய தெலுங்கு படங்கள் தமிழில் வசூலித்ததை விட அதிகமாக வசூலித்துள்ளது. அங்கு இருந்த ஓபனிங் இங்கும் இருந்தது என்கிறார்கள். இது வினியோகஸ்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    ரூ.2 கோடிக்கு மேல்

    ரூ.2 கோடிக்கு மேல்

    இதுபற்றி தெலுங்கு படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுபவரும், தயாரிப்பாளருமான ராஜராஜாவிடம் கேட்டபோது, 'இதற்கு முன் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் அதிக வசூலை தராது. முக்கியமான படங்கள் மட்டுமே வசூல் அள்ளும். டப் பண்ணி வெளியிட்டால் ஓரளவு கிடைக்கும். நேரடி தெலுங்கு படங்களின் வசூல் அதிகம் இருக்காது.

    என்ன காரணம்?

    என்ன காரணம்?

    மகேஷ்பாபு படங்களுக்கு ஓரளவு கிடைக்கும். ஆனால், இப்போது மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் படங்கள், கடந்த சில நாட்களுக்கு முன் வரை தலா ரூ.2 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளது. இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஆச்சரியமானதுதான்' என்றார். திடீரென இப்படி வசூல் உயர்வதற்கு என்ன காரணம் என்று கேட்டோம்.

    தெலுங்கு மாணவர்கள்

    தெலுங்கு மாணவர்கள்

    அவர் கூறும்போது, தமிழகத்தில் குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள கல்லூரிகளில் தெலுங்கு மாணவர்கள் அதிகமாக படிக்கிறார்கள். அதோடு ஐடி ஊழியர்களில் தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களால் வசூல் அள்ளுக்கின்றன. அதோடு மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் படங்களில் ஆக்‌ஷன் அதிகமாக இருக்கும் என்பதால் தமிழ் ரசிகர்களும் விரும்புவார்கள் என்றார்.

    English summary
    Mahesh babu, Allu arjun's Latest movies get good collection in Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X