KH X RK: ரசிகர்களை வெயிட்டிங்கில் வெறி ஏத்தும் ரெட் ஜெயன்ட்.. இப்போ இறக்கிய அப்டேட்டை பாருங்க!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து நடிக்கும் படத்தின் மாஸான ப்ரோமோ வீடியோ பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் சில அப்டேட்களை வெளியிட்ட நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியிடுவதற்கு முன்னர் வெளியிட்டுள்ள அப்டேட் ரசிகர்களை வெயிட்டிங்கில் வெறியேற்றும் அப்டேட்டாக உள்ளது.
அதாவது ரெட் ஜெயன்ட் நிறுவனம் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “வரலாறு தன்னைத்தானே அடிக்கடி மாற்றிக்கொள்வதில்லை... ஆனால் அப்படி நடக்கும்போது, அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறும்! ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெருமையுடன் வழங்கும் திரையுலகின் இரு பெரும் இமயங்களின் சங்கமம்!
#KHxRK - நாம் பார்த்து வளர்ந்த, வியந்து ரசித்த இரு ஆளுமைகளின் பிரம்மாண்ட கொண்டாட்டம். இந்த வரலாற்றுத் தருணத்தை சாத்தியமாக்கிய இயக்குனர் நெல்சனின் அசாத்திய உழைப்பிற்கும், நம் 'ராக்ஸ்டார்' அனிருத்தின் அதிரடி இசைக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்று அந்த பொன்னாள்! கொண்டாட்டத்திற்கு தயாரா?” என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தையும் ஆர்வத்தையும் மேலும் அதிகரிக்கும் வகையில் இவர்களின் போஸ்ட் இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

ஜெயிலர் 2 படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த இரண்டு படங்களையும் கமல்ஹாசன் உடன் இணைந்து தான் பணியாற்றுகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கமல் - ரஜினி: அதேப்போல் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 174வது படமாகவும், உலகநாயகன் கமல்ஹாசனின் 236 வது படமாகவும் உருவாகவுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் தயாரிப்புச் செலவு மட்டும் ரூபாய் 750 கோடிகள் என்று கூறப்படுகிறது.
நெல்சன்: இந்த படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரது கூலி படம் சரியாக ஒர்க்-அவுட் ஆகாத காரணத்தால் இவர்கள் இருவரையும் இயக்கும் வாய்ப்பை இழந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பணியாற்றும் போது உலகநாயகன் கமல்ஹாசனுடன் ஏற்பட்ட அறிமுகமும் அனுபவமும், அதேபோல் ஜெயிலர் 1, ஜெயிலர் 2 என இரண்டு படங்களில் பணியாற்றும் போது ரஜினியுடன் ஏற்பட்ட அறிமுகம் மற்றும் அனுபவம் என நெல்சனுக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரையும் வைத்து மாஸான படத்தை நெல்சனால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை கமல் மற்றும் ரஜினி என இருவருக்குமே ஏற்பட்டதால் தான் அவருக்கு இந்த வாய்ப்பை இருவரும் உருவாக்கி கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. நெல்சனும் இருவருக்கும் ஏற்ற வகையில் பக்காவான ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வைத்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications