பிசாசு 2-ல் நடிக்கும் நெற்றிக்கண் பட வில்லன்... புதிய தகவல்!

சென்னை : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வருகிறது பிசாசு பாகம்-2. இதில் நடிகை ஆண்ட்ரியா லீட் ரோலில் நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிசாசு 2-ன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இரவு பகல் பாராமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பேய் படங்களையும் மிக வித்தியாசமாக எடுக்கும் மிஷ்கின் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் பிசாசு படத்தில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தில் வில்லனாக கலக்கிய அஜ்மல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திகில் படங்கள்

திகில் படங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் உள்ள மிஷ்கின் தொடர்ந்து எதார்த்தமான கதைகளை இயக்கி வருகிறார். இயக்குனர்கள் பலரும் நடிகர்களின் கண்களையும் முகங்களையும் மட்டுமே காட்டிக் கொண்டிருக்க இயக்குனர் மிஷ்கின் சற்று வித்தியாசமாக நடிகர்களின் கைகளையும் கால்களையும் மட்டுமே நடிக்க வைத்து படங்களை இன்றுவரை இயக்கி வருகிறார். பேய் படங்கள் என்றால் அனைவரையும் பயமுறுத்தும் அச்சுறுத்தும் மிரட்டும் என இத்தனை காலங்களாக திகில் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிற பேய் என்றால் பயமுறுத்துவது மட்டுமல்ல அன்பையும் காட்டும் என பிசாசு படத்தின் மூலம் பேயின் உணர்வுகளை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு புது விதமான பேய் படத்தை கொடுத்த மிஷ்கின் பாராட்டுகளை பெற்றிருந்தார். பிசாசு முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக இப்பொழுது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

 பேயாக ஆண்ட்ரியா

பேயாக ஆண்ட்ரியா

தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா கதாபாத்திரத்திற்கு தேவைப்படும் என்றால் நிர்வாணமாகக் கூட நடிக்கத் தயார் என சமீபத்தில் கூறியிருந்ததை அடுத்து இப்பொழுது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டில் பேயாக நடித்து வருகிறார். பல படங்களில் கவர்ச்சியிலும் தனது இனிமையான குரலாலும் அனைவரையும் கட்டி போட்ட ஆண்ட்ரியா முதல்முறையாக பேயாக நடிப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆண்ட்ரியா ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்திருந்தார். துப்பறிவாளன் படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருந்த ஆண்ட்ரியா இப்பொழுது பேயாக நடிக்க இந்த முறை மிஷ்கின் எந்தமாதிரியான பேயை காட்டுவார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. சென்ற மாதமே தொடங்கப்பட்ட பிசாசு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய மிஷ்கின் ஒரே கட்டமாக இரவு பகல் பாராமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைக்கிறார். எனவே இப்படத்தின் இசையும் வித்தியாசமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

நிரந்தர வெற்றியாக

நிரந்தர வெற்றியாக

பிசாசு இரண்டில் ஆண்ட்ரியாவை தவிர நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது புதிதாக பிரபல நடிகர் அஜ்மல் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்த நடிகர் அஜ்மலுக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் வெற்றி பெறவில்லை. அவருடைய கேரியரில் கோ மட்டுமே நிரந்தர வெற்றியாக இன்று வரை இருந்து வருகிறது. தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வந்த அஜ்மல் இன்று வரை திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் மிரட்டலான நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார்.

 பிசாசு 2ல் அஜ்மல்

பிசாசு 2ல் அஜ்மல்

கொரிய மொழியில் வெளியான பிளைன்ட் திரைப்படம் தமிழில் நெற்றிக்கண் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட இதில் நயன்தாரா லீட் ரோலில் பார்வையற்ற பெண்மணியாக நடிக்க இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியிருந்தார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் படம் கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திரையரங்குகள் இன்னும் திறக்க கால தாமதமாகும் என்பதால் சமீபத்தில் இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. வெளியான நாள் முதலே தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்து இருக்க அதேசமயம் இப்படத்தில் வில்லனாக கலக்கியிருந்த அஜ்மலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இதுவரை ஸ்வீட்டான கதாநாயகனாக வலம் வந்த அஜ்மல் இந்த படத்தில் டோட்டலாக நெகட்டிவ் ரோலுக்கு மாறி பெண்களை கொல்லும் சைக்கோவாக கலக்கலாக நடித்து கைதட்டல்களை பெற்றிருந்தார். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பிசாசு 2ல் முக்கிய வேடத்தில் அஜ்மல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நெற்றிக்கண் படத்தை அடுத்து பிசாசு 2ம் அஜ்மலுக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X