அதிரடியாக வந்த விக்ரம் அப்டேட்... கமலுக்கு மகனாக நடிக்கும் இளம் ஹீரோ
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கப்பட்டது. ஷுட்டிங் ஆரம்பமானது முதல் ஏதாவது ஒரு தகவல் விக்ரம் படம் பற்றி வந்து கொண்டிருக்கிறது.
கமலை தொடர்ந்து வில்லன்களில் ஒருவராக நடிக்கும் ஃபகத் ஃபாசிலும் ஷுட்டிங்கில் இணைந்துள்ளார். ஆக்ஷன், த்ரில்லர் படமாக அமைக்கப்பட்டு வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட 5 பேர் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

கொண்டாட வைத்த ஃபஸ்ட்லுக்
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபஸ்ட்லுக் கமலின் உலகநாயகன் அந்தஸ்த்தை மீண்டும் உயர்த்தி உள்ளது.

கமலுக்கு மகன் இவரா
இந்த படத்தில் கமல், பார்வையற்றவராக நடிக்கிறார் என முதலில் கூறப்பட்டது. தற்போது கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமும் நடிக்கிறாராம். அதுவும் கமலின் மகனாக நடிக்கிறாராம்.

கமலின் நெருங்கிய நண்பர்
கமலின் பல படங்களில் ஜெயராம் இணைந்து பணியாற்றி உள்ளார். கமலின் நெருங்கிய திரையுலக நண்பரான ஜெயராம், பஞ்சதந்திரம், தெனாலி, உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

விரைவில் அறிவிப்பு
இருந்தாலும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











