அமேசானில் வெளியாகும் சாணிக் காயிதம்... சூடான அப்டேட்!

சென்னை : இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சாணிக் காயிதம்.

இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிக அளவில் உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் வித்தியாசமாகவும் ரத்தக்கறையுடன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற இப்பொழுது சாணிக் காயிதம் அமேசான் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சாணிக் காகிதம்

சாணிக் காகிதம்

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இரண்டாவது திரைப்படமாக சாணிக் காயிதம் உருவாகி வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக இன்று வரை தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள செல்வராகவன் முதல் முறையாக நடிகராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

படப்பிடிப்பு தளத்தில்

படப்பிடிப்பு தளத்தில்

சாணிக் காயிதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுரேஷ் மற்றும் செல்வராகவன் ரத்தக்கரை களுடன் கைதிகள் போல உட்கார்ந்து கொண்டு இருக்க எதிர்பார்ப்பு வேற லெவலில் எகிறி உள்ளது. இதற்கிடையில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில புகைப்படங்களையும் படக் குழு வெளியிட்டு வைரலானது.

இந்த வருட ரிலீஸ்

இந்த வருட ரிலீஸ்

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இந்த திரைப்படம் இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் படக்குழு

பேச்சுவார்த்தையில் படக்குழு

புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி 15 நாட்கள் கழித்து ஏதாவது ஒரு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாணிக் காயிதம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் படக்குழு உள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X