Just In
- 27 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 36 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
- 1 hr ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 1 hr ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
Don't Miss!
- News
சசிகலா அதிமுகவிலேயே இல்லை..சிறையில் இருந்து வந்தாலும் 100% இணைக்க வாய்ப்பில்லை - முதல்வர் உறுதி
- Lifestyle
90% மக்கள் புறக்கணிக்கும் சர்க்கரை நோயின் அபாயகரமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
- Finance
மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..!
- Sports
நடுவர்களின் பாரபட்சம்.. எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் ஆஸ்திரேலிய அணி.. களத்தில் ஏற்பட்ட சர்ச்சை!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கஸ்தூரி அளவுக்கு நான் எந்த படத்திலும் விரசமா நடிக்கலையே: லதா பதிலடி

சென்னை: தன்னையும், எம்.ஜி.ஆரையும் தவறாக சித்தரித்து ட்வீட் செய்த நடிகை கஸ்தூரிக்கு நடிகை லதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல். போட்டி பற்றி விமர்சித்த கஸ்தூரி, என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க என்று ட்வீட் செய்தார்.
தான் அப்படி கருத்து தெரிவித்ததில் தவறும் இல்லை என்றார். இந்நிலையில் இது குறித்து நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
என்னம்மா ஏமி, கர்ப்பமா இருக்கும்போது இப்படி பண்ணலாமா?

கஸ்தூரி
எம்.ஜி.ஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்' எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கருத்து
கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், எம்.ஜி.ஆர் நடிச்ச படத்தைச் சொல்லணும்.

பப்ளிசிட்டி
அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது... இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.

ரசிகர் மன்றங்கள்
இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் என்று லதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.