»   »  ஆர் டி பர்மன் இசை... வருங்காலத்திலும் ஆச்சர்யத்தை நிகழ்த்தும்! - லதா மங்கேஷ்கர்

ஆர் டி பர்மன் இசை... வருங்காலத்திலும் ஆச்சர்யத்தை நிகழ்த்தும்! - லதா மங்கேஷ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆர் டி பர்மன் இசை இனி வருங்காலத்திலும் ஆச்சர்யத்தை நிகழ்த்தும் என்று பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.

பழம்பெரும் இசை அமைப்பாளரான ஆர்.டி. பர்மனின் 22வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு செலுத்திய அஞ்சலியின்போது இதனைக் கூறினார் லதா மங்கேஷ்கர்.

Latha Mangeshkar pays tribute to RD Burman

பாலிவுட்டில் கோலோச்சிய இசை மேதை எஸ்டி பர்மனின் மகன்தான் ஆர்டி பர்மன். லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லேவை திருமணம் செய்து கொண்ட பர்மன் தனது இசை பயணத்தில் சகோதரிகள் இருவருடனும் இணைந்து பல பாடல்களை ஒன்றாக பாடியுள்ளார்.

375-க்கும் அதிகமான படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றிய ஆர் டி பர்மன், கடந்த 1994ம் ஆண்டு ஜனவரி 4ந்தேதி மரணமடைந்தார். அவர் இசையமைத்து அவரது மரணத்துக்குப் பின் வெளியான 1942 எ லவ் ஸ்டோரி படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிப் பெற்றன.

அவர் மரணமடைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் பாலிவுட்டிலும் சரி, உலகளாவிய இசை ரசிகர்களாலும் சரி... ஆர் டி பர்மன் பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மங்கேஷ்கர் தனது ட்விட்டர் செய்தியில், இன்று ஆர்.டி. பர்மனின் (பஞ்சம்) 22வது நினைவு தினம். அவரது இசை மற்றும் நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. வருங்காலத்திலும் அவரது இசை தொடர்ந்து அதிசயத்தை நிகழ்த்தும் என நான் நம்புகிறேன்.

அவருக்கு என உளப்பூர்வ அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன்," என தெரிவித்துள்ளார்.

ஆர் டி பர்மன் இசையில் பல நூறு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Veteran playback singer Latha Mangeshkar pays her tribute to late legend RD Burman on his 22nd death Anniversary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil