twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் சொன்னது இதுதான்.. லதா ரஜினிகாந்த் விளக்கம்

    கோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினியின் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

    |

    Recommended Video

    கோச்சடையான் வழக்கு..லதா ரஜினிகாந்த் விளக்கம்- வீடியோ

    சென்னை: ரஜினியின் கோச்சடையான் பட வழக்கு தொடர்பாக வெளியான செய்திகளுக்கு ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

    ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்-பீரோ நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள 'மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துக்கு தாங்கள் கடன் அளித்திருந்ததாகவும், வாங்கிய கடன் தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தரவில்லை என்றும் ஆட்-பீரோ' நிறுவனம் கூறியது. இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ஆட்-பீரோ' உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    Latha rajinikanth explanation on Kochadaiyan case

    இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் கடன் நிலுவைத் தொகையான ரூ. 6. 20 கோடியை ஆட் -பீரோ' நிறுவனத்துக்கு லதா ரஜினிகாந்த் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு லதா ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி, கடன் நிலுவை தொகையை லதா ரஜினிகாந்த் திருப்பி வழங்கவில்லை என ஆட்-பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. கோர்ட் உத்தரவிட்ட பின்னரும் நிலுவை தொகையை ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர். பானுமதி ஆகியோர், வழக்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டி வரும் எனவும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தனர். வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு குறித்து வெளியான செய்திகளுக்கு லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " ஜூலை 3-ம் தேதி நீதிமன்ற ஆணையில் லதா ரஜினிகாந்த் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைச் செய்தி நிறுவனங்கள் முழுமையாகக் குறிப்பிடவில்லை.

    உச்ச நீதிமன்ற ஆணைப்படி கூறப்பட்டது இது தான்: மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புத் துறப்பு மட்டுமின்றி, முதல் எதிர் மனுதாரரான லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலானது, எதிர்மனுதாரரின் கருத்தினைக் கேட்காமல் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு ஆணையில் குறிப்பிட்ட அளவுக்கு அவருடைய பொறுப்புகள் இல்லை.

    எனவே ஏப்ரல் 16 தேதியிட்ட நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, அந்த நிறுவனப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்நுழைவதை விட, மனுவின் மீது தீர விசாரணை நடத்தி அதன்படி முடிவெடுப்பது உசிதமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. வழக்கு இறுதித் தீர்ப்புக்காக ஜூலை 10-ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது" என லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Actor Rajinikanth's wife Latha has said that her advocate promised the supreme court to return the amount to the concerned parties without knowledge in Kochadaiyan case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X