கோச்சடையான் வழக்கு.. தொடர் சிக்கலில் லதா ரஜினிகாந்த்.. எப்போதுதான் முடியுமோ அந்த பிரச்சனை?

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தின் இளைய மகள் இயக்கத்தில் வெளியான லைவ் ஆக்‌ஷன் படமான கோச்சடையான் சொதப்பிய நிலையில், அந்த படத்திற்கு நிதி வழங்கிய தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

Latha Rajinikanth faces legal issues over Kochadaiiyaan case at Supreme Court

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், 2014ம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தின் வழக்கு 9 ஆண்டுகளாக இன்னமும் தொடர்ந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினிகாந்தின் கோச்சடையான்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 9 ஆண்டுகளுக்கு முன்பாக தனது இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்தார்.

நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்த நிலையில், அதற்கெல்லாம் முன்பாகவே அப்படியொரு லைவ் ஆக்‌ஷன் பட முயற்சியை 2011லேயே சுல்தான் தி வாரியர் என ஆரம்பித்து, அதன் பின்னர் 2014ல் கோச்சடையான் என அந்த படத்தை உருவாக்கி இருந்தனர்.

Latha Rajinikanth faces legal issues over Kochadaiiyaan case at Supreme Court

தள்ளுபடியான வழக்கு: 2014ம் ஆண்டு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரஜினிகாந்த் மனைவி மீது அவதூறு கருத்துக்கள் சொல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், 2016ல் கர்நாடக உயர்நீதிமன்றம் கோச்சடையான் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆனால், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது நிதியளித்த தனியார் நிறுவனமான ஆட் பியூரோ முரளி என்பவருக்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அளித்த உத்தரவாதத்தின் பெயரில் கடன் வழங்கியதாகவும் ஆனால், கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டனர் என்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கூடிய விரைவிலேயே விசாரணைக்கு வர உள்ளதாக கூறுகின்றனர். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோச்சடையான் படம் தொடர்பான வழக்கு எப்போது நிறைவடையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X