மகளின் மறுமணம் தடையில்லாமல் நடக்க பார்த்து பார்த்து வேலை செய்யும் லதா ரஜினிகாந்த்

By Siva

Recommended Video

Latha Rajinikanth: மறுமணம் தடங்கலும் இல்லாமல் நடக்க லதா ரஜினி போலீயிடம் மனு

சென்னை: மகள் சவுந்தர்யாவின் மறுமணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடக்க லதா ரஜினிகாந்த் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதை அவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

இதையடுத்து வரும் 10ம் தேதி அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.

பரிகாரபூஜை

பரிகாரபூஜை

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் மறுமணம் நிலைத்து நிற்க வேண்டி சவுந்தர்யா கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் பரிகார பூஜை செய்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

சவுந்தர்யா, விசாகனின் திருமணம் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் சிலர், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து லதா ரஜினிகாந்த் சென்னை இ3 காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

வீடு

வீடு

வரும் 10ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், 12ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக லதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். சவுந்தர்யாவின் முதல் திருமணம் போன்று இல்லாமல் மறுமணத்தை வீட்டிலேயே சிம்பிளாக நடத்துகிறார்கள்.

லதா

லதா

மகளின் திருமணம் எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக நடக்கத் தேவையான நடவடிக்கைகளை லதா ரஜினிகாந்த் எடுத்து வருகிறார். சவுந்தர்யாவை போன்றே விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X