விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா?.. மனைவி லதா ஓபன் டாக்.. மேடம் செம ஓபனா சொல்லிட்டாங்க ப்பா!

சென்னை: ரஜினிகாந்த்தின் மனைவி லதா 'மக்கள் மேடை' என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். இந்த இயக்கம் ரஜினியின் தூண்டுதலின் பேரில்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்தும், விஜய் Vs ரஜினி என கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் குறித்தும் ஓபனாக பேசியிருக்கிறார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்னர் சிலர் காரணங்களால் ஜகா வாங்கினார். அதேசமயம் விஜய்யோ சொன்னபடி கட்சி ஆரம்பித்து; தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார். விஜய் இப்போது இருக்கும் இடம் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டியது என சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதுமட்டுமின்றி விஜய் மீது ரஜினிக்கு சரியான பொறாமை. அதனால்தான் வாழ்த்தெல்லாம் தெரிவிக்கவில்லை எனவும் சிலர் கிளப்பிவிட; செய்தியாளர்களை சந்தித்து அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என விளக்கினார்.

Latha Rajinikanth Rejects Claims of Rajini s Jealousy Toward Vijay
Photo Credit:

லதா ரஜினிகாந்த்தின் இயக்கம்: இது ஒருபக்கம் இருக்க ரஜினியின் மனைவி லதா, 'மக்கள் மேடை' என இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். விஜய் முதலமைச்சரானதை பார்த்து கடுப்பாகிதான் இந்த இயக்காத்தை அவர் தொடங்கியிருக்கிறார் என்றும்; இதற்கு பின்னனியில் ரஜினி இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் கிளம்பின. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார் லதா.

Also Read
ஹபீபி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?.. இவரே பாராட்டிருக்காரே பாஸ்!
ஹபீபி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?.. இவரே பாராட்டிருக்காரே பாஸ்!

லதா பேட்டி: மதுவந்தி டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "மக்கள் சக்தியை ஒன்றாக திரட்டுவதற்கு உருவாக்கப்பட்டதுதான் மக்கள் மேடை இயக்கம். முன்பே இந்த இயக்கத்தை நாங்கள் தொடங்கிவிட்டோம். சமீபத்தில் எங்கள் இயக்கம் சார்பில் பல முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். கெடுவாய்ப்பாக நாங்கள் எங்கள் இயக்கத்தை பற்றி அறிவித்த அடுத்த நாளே அண்ணாமலையும் அவருடைய இயக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

யாரும் வெளியிடவில்லை: நாங்கள் எங்கள் இயக்கம் சார்பாக நல்ல காரியங்கள் செய்தபோது யாருமே அதை பற்றி செய்தியை வெளியிடவில்லை. ஆனால் இந்த மாதிரி சர்ச்சை எப்போது வரும் என எதிர்பார்த்து செய்தி வெளியிடுகிறார்கள். சாமானியர்கள் முதல் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் எங்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றலாம். விருப்பப்பட்டால் அண்ணாமலையே எங்கள் இயக்கத்தில் இணையலாம்.

ரஜினிக்கும் இதற்கும் தொடர்பில்லை: முதலில் நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் செய்யும் காரியத்துக்கு என் கணவரை தொடர்புப்படுத்தக்கூடாது. ஆவரது பாதை வேறு. அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கிறது. அஹ்டனால் என்னையும், அவரையும் இந்த மாதிரி விஷயங்களில் தொடர்புப்படுத்தி எழுதுவதை நிறுத்துங்கள்" என்றார். அவரிடம் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

ஓபனாக சொன்ன லதா: அதற்கு பதிலளித்த லதா, "பிரபலமாக இருப்பவர்களை பற்றி பேசுபவர்கள் அதிகம். இத்தனை வருடங்களாக தெரிந்த ஒரு நபரை பற்றி இப்படி பேசுவதே பெரிய தவறு. ரஜினி பெரிய தலைவர். தலைமைத்துவ பண்பை அவரிடம்தான் பலர் கற்றுக்கொள்கிறார்கள். முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் பலருக்கு ரோல் மாடல். அவரை இந்த அளவுக்கு இறக்கி பேசுவதே தவறு. இப்படி பேசுபவர்கள் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கிறார்கள். வாய் கூசாமல் பேசுவது தமிழ் மரபு இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X