ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்!

சென்னை: ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என விரும்பினார். ஆனால், திமுகவின் மிரட்டல்களால் அவர் அரசியலுக்கு வரவில்லை என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து, சென்னை விமானநிலையத்தில் ரஜினிகாந்தின் மனைவி லதா பேசி உள்ளார்.

கடந்த 12-ந் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், இதே திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்ததால் அவர் அரசியலுக்கு வராமல் நடிக்க சென்றுவிட்டார். ஆனால்,
மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது என உண்மைக்கு புறம்பான ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.

Rajinikanth Aadhav Arjuna

ஆதவ் அர்ஜூனா பேச்சு: ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், தனக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறியிருந்த ரஜினிகாந்த். 'காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' என தெரிவித்து இருந்தார்.

லதா பேச்சு: இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய லதா, கமலும், ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. அனைவரும் அந்த நாளுக்காக காத்து இருக்கிறோம் என்றார். இத்தொடர்ந்து செய்தியாளர் ரஜினியின் இத்தனை ஆண்டுகளான சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த லதா, அது கடவுளின் கருணையும், மக்களின் அன்பு, அவரின் கடுமையான உழைப்பு இவை எல்லாம் தான், அவற்றை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர், ஆதவ் அர்ஜூனா ரஜினி குறித்து பேசியது பற்றி கேள்விக்கு பதில் அளித்த இவர், ரஜினியே இதெல்லாம் உண்மை இல்லை, தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என சொல்லிவிட்டார் என்பதால் இதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்ப வில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X