கணவர் ”ரஜினி” யின் படத்தில் பாடி அசத்தியுள்ள மனைவி “லதா ரஜினி”

சென்னை: கணவர் ரஜினிகாந்த் "கோச்சடையான்" ஆக நடித்த விஷயத்தை விட அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அதில் பாடி இருப்பதுதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது கோலிவுட்டில்.

கோச்சடையான் படத்தில் இரண்டு பாடல்கள் மணமகன் மற்றும் மணமகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், "மணமகளுக்கான சத்தியம்" என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார்.

மோஷன் கேப்சரில் கோச்சடையான் :

மோஷன் கேப்சரில் கோச்சடையான் :

ரஜினி மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் "கோச்சடையான்". இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். "மோஷன் கேப்சர்" என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார் சௌந்தர்யா.

குரலால் இணைத்த படம்:

குரலால் இணைத்த படம்:

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இப்படத்தில் ரஜினி ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்தும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

லதாவின் பேரார்வம்:

லதாவின் பேரார்வம்:

"மணப்பெண்ணின் சத்தியம்" என்ற பாடலை அசத்தலாக பாடியுள்ள லதா பற்றி சௌந்தர்யா கூறுகையில், "பாடுவதற்கு எப்போதுமே அவர் பேரார்வம் கொண்டவர். அவர் நல்ல திறமையான பாடகியும் கூட. அவர் பாடிய இந்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

தெலுங்கிலும் பாடிய லதா:

தெலுங்கிலும் பாடிய லதா:

எந்தவித பயிற்சியும் இல்லாமல் வியப்பூட்டும் வகையில் பாடி அசத்திவிட்டார். இனி மேலும் அவர் தொடர்ந்து பாடுவார் என்று நம்புகிறேன். இந்த பாடல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பாடல். தெலுங்கிலும் இப்பாடலை அவரே பாடியுள்ளார்" என்று சௌந்தர்யா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X