கணவர் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.. ரஜினிகாந்த் மீது அவர் மனைவி லதாவுக்கு எவ்வளவு லவ் பாருங்க
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கூலி திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருகிறார். தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பேசியிருக்கும் விஷயம் அவர் யாரை சொல்கிறார் என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி கடந்த வருடம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. இயக்குநரின் மார்க்கெட்டையும் அப்படம் அசைத்து பார்த்துவிட்டதாக தெரிகிறது. இப்படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தி நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இது இன்னும் சில மாதங்களில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தில் சந்தித்த தோல்விக்கு இதில் பதிலடி கொடுப்பார் என நம்பலாம்.

கமலுடன் கூட்டணி: ஜெயிலர் 2 படத்தையும் முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173ஆவது படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதத்திலிருந்து தொடங்குகிறது. இதனை கமல்ஹாசன் தயாரிக்கிறார். அவரது தயாரிபில் நடித்து முடித்துவிட்டு அவருடனேயே இன்னொரு படத்தில் நடிக்கிறார். அதற்கு KHXRK என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனையும் நெல்சன் திலீப்குமார்தான் இயக்குகிறார். சமீபத்தில்தான் படத்தின் ப்ரோமோ ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது.
ரஜினி மகள் பட பூஜை: இதற்கிடையே ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக எப்படியாவது வென்றுவிட வேண்டும் என முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். லால் சலாம் படம் ஓகே ரகமாக இருந்தாலும் ரொம்பவே மொக்கை வாங்கியது. அடுத்ததாக ஜெய், சுராஜ் வெஞ்சமுடு உள்ளிட்டோரை வைத்து டெக்ஸ்லா படத்தை அவர் இயக்குகிறார். நேற்று இப்படத்தின் பூஜை நடந்தது. அதில் ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். ரஜினியின் மனைவி லதாவும் பங்கேற்றார். இளைய மகள் சௌந்தர்யாவும் சக்சஸ்ஃபுல் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.
லதா ரஜினிகாந்த் பேச்சு: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லதா பேசுகையில், "குடும்பத்தினர் சப்போர்ட் இல்லாமல் எதுவும் நடக்காது. ஒரு வீட்டில் கணவருடைய சப்போர்ட் இல்லாமல் ஒரு பெண் எதையும் எடுத்து செய்ய முடியாது. அண்ணன், தங்கை, பேரன் என எல்லோரும் வீட்டில் இருக்கும்போது நம்முடைய கருத்தை கேட்டு அதில் கலந்துகொண்டு ஊக்கம் கொடுக்காமல் பெண்ணால் எதையும் செய்ய முடியாது என்பது என்னுடைய கருத்து.
தலை வணங்குகிறேன்: முதலில் எனது கணவரை தலை வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் நலமோடு நினைக்கும் மனது கணவருடையது. என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் அவருக்கு சமர்ப்பிக்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் விவாகரத்து நடப்பதும், நடக்காததும் சூழலை, ஒவ்வொருவரது மனப்பான்மையை பொறுத்து இருக்கிறது. அந்தக் காலத்தில் அனைத்து அழுத்தங்களையும் சமாளிக்கும் மனப்பான்மை இருந்தது. எத்தனையோ பேர் இப்போதும் நன்றாகத்தான் வாழ்கிறார்கள். இது இரண்டு மனங்களுக்குள் இருக்கும் ஆத்மார்த்தமான அன்பை பொறுத்தது" என்றார்.


Click it and Unblock the Notifications















