லாலி பப்.. ஆட்டோ ஹார்ன்.. கேட்ச் பிடிக்கும் கோலி.. சும்மா பிரியங்காவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வைரல் மீம்களை பார்த்து அவரே விழுந்து விழுந்து சிரித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார்.

கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது சுய சரிதை புத்தகத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

ஃபேஷன் ஃப்ரீக் ஆன இவர் சமீபத்தில் அணிந்த உடையை வைத்து ஏகப்பட்ட மீம்கள் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன.

இப்படியும் ஒரு உடையா

இப்படியும் ஒரு உடையா

ஃபேஷன் ஃப்ரீக் ஆன நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அணிந்து வைரலாக்கிய பச்சை நிற பந்து போன்ற உடையை ஏகப்பட்ட நெட்டிசன்கள் பங்கமாக பலவித மீம்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த மீம்கள் எனது நாளை முழுமை அடைய செய்தது என நடிகை பிரியங்கா சோப்ராவே அவற்றை ஷேர் செய்து பாராட்டி உள்ளார்.

ஆட்டோ ஹார்ன்

ஆட்டோ ஹார்ன்

நடிகை பிரியாங்கா சோப்ராவின் பலூன் உடையை பார்த்ததுமே ஏகப்பட்ட மீம் கிரியேட்டர்களுக்கு அடடா.. சூப்பரான கன்டென்ட் கிடைத்து விட்டது என வித விதமாக வச்சு செய்து வருகின்றனர். அதிலும், இந்த ஆட்டோ ஹார்ன் புகைப்படம் பிரியங்கா சோப்ராவின் ஹாட் ஃபேவரைட் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

பாராசூட் பிரியங்கா

பாராசூட் பிரியங்கா

லாலி பாப் தொடங்கி உருண்டையாக எதெல்லாம் இருக்கோ அதையெல்லாம் பிரியாங்கா சோப்ராவின் இந்த புகைப்படத்தை வைத்து உருவாக்கி இணையத்தை கலகலப்பாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். பல பாராசூட்களுக்கு நடுவே பச்சை நிற பிரியங்கா பாராசூட் எங்கேன்னு கண்டுபிடித்து சிரிங்க!

ஆட்டம் பாம் பட்டாசு

ஆட்டம் பாம் பட்டாசு

ஆட்டோ ஹார்னில் தொடங்கி ஆட்டம் பாம் பட்டாசு வரைக்கும் பிரியங்கா சோப்ராவை வெரைட்டி வெரைட்டியாக யோசித்து மீம் கிரியேட்டர்கள் செய்துள்ள சேட்டையை அவரே அழகாக ரசித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். முன்னதாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் சிக்கித் தவித்தது குறிப்பிடத்தக்கது.

பால் கேட்ச்

பால் கேட்ச்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி பிடிக்கும் பந்தாகவே பிரியங்கா சோப்ராவை மாற்றி உலகளவில் லந்து செய்து வருகின்றனர் இணைய உலக படைப்பாளிகள். ஒவ்வொரு மீமையும் பார்த்த மறு கணமே அடக்க முடியாமல் பலரும் சிரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நீங்களும் கொஞ்சம் என்ஜாய் பண்ணுங்க..

வான் கோழி

வான் கோழி

பச்சை நிறத்தில் பந்து போன்ற வித்தியாசமான உடையணிந்து போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படத்தை கண்ணாடி போடாத ஸ்பைடர் மேன் வான் கோழி என நினைத்து பார்ப்பது போன்ற வித்தியாசமான சிந்தனை எடிட்டிங் போட்டோவையும் பிரியங்காவே ஷேர் செய்துள்ளார்.

லாலி பப்

லாலி பப்

பிரியங்கா சோப்ராவின் இந்த புகைப்படத்தை பார்த்த உடனே என்ன 5 அடியில் ஒரு லாலி பாப் நிக்குதேன்னு தான் பலரும் யோசித்து இருப்பார்கள். லாலி பாப்களுக்கு நடுவே பிரியங்காவின் புகைப்படத்தையும் ஒரு லாலி பாப் ஆக்கி அட்டகாசம் செய்துள்ளனர் ஆன்லைன் கிரியேட்டர்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X