கர்ப்பமான சசிகுமார் பட ஹீரோயின்.. இத்தாலியில் தெலுங்கு நடிகருடன் திருமணம் ஆச்சே.. வாழ்த்தும் ஃபேன்ஸ்!

ஹைதராபாத்: உத்தரகாண்டில் பிறந்து வளர்ந்த லாவண்யா திரிபாதி தெலுங்கு திரையுலக நடிகர் வருண் தேஜை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக அறிவித்துள்ளனர். கூடிய விரைவிலேயே நட்சத்திர தம்பதிகளான வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரப்போகிறோம் என பதிவிட்டுள்ளனர்.

2006ம் ஆண்டு மிஸ் உத்தரகாண்ட் அழகிப் போட்டியில் பங்கேற்று டைட்டிலை தட்டித் தூக்கிய லாவண்யா திரிபாதிக்கு "ஷ்ஷ்ஷ் கோய் ஹை " எனும் இந்தி சீரியலில் அதே ஆண்டு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. 2007 முதல் 2010ம் ஆண்டு வரை ஒளிபரப்பான பிரபல சீரியலான சிஐடி தொடரில் சாக்‌ஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Lavanya Tripathi and Varun Tej announced a super happy news

ஹீரோயினாக கடந்த 2012ம் தெலுங்கு திரையுலகில் வெளியான அண்டால ராக்சஷி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏகப்பட்ட தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தில் நடித்து கோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார்.

இத்தாலியில் நடந்த திருமணம்: தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை லாவண்யா திரிபாதி கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் தெலுங்கு நடிகர் வருண் தேஜை திருமணம் செய்துக் கொண்டார். சிரஞ்சீவியின் கொனிடேலா குடும்பத்தின் அங்கத்தினரான வருண் தேஜை லாவண்யா திரிபாதி திருமணம் செய்துக் கொண்ட போது இத்தாலிக்கு சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் படையெடுத்து தம்பதிகளை வாழ்த்தினர்.

Lavanya Tripathi and Varun Tej announced a super happy news

லாவண்யா திரிபாதி கர்ப்பம்: 2000ம் ஆண்டு பிரம்மானந்தம் நடிப்பில் வெளியான ஹேண்ட்ஸ் அப் படத்தில் காமெடி நடிகராக நடித்த வருண் தேஜ் 2014ம் ஆண்டு வெளியான முகுந்தா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். சாய் பல்லவியுடன் நடித்த ஃபிடா, கடந்த ஆண்டு வெளியான மட்கா என பல வெற்றிப் படங்களை கொடுத்த வருண் தேஜை லாவண்யா திரிபாதி திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

வாழ்க்கையின் அழகான ரோல்: சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் அப்பாவாகவும் மாறுவது தான் ஒவ்வொருத்தருக்கும் முக்கியமான ரோல் ஆகும். வருண் தேஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'Life's Most Beautiful Role' என பதிவிட்டு தனது மனைவி லாவண்யா திரிபாதியுடன் இணைந்து குட்டி ஷோவில் கை வைத்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்து: தமிழில் சசிகுமார் உடன் இணைந்து பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி மாயவன் படத்திலும் நடித்துள்ளார். வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் விரைவில் பெற்றோர்களாக பொறுப்பேற்க உள்ள நிலையில், கர்ப்பவதியாக இருக்கும் லாவண்யாவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கொனிடேலா குடும்பமே கொண்டாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X