'3 முறை கருக்கலைப்பு செய்தார்..' அதிர்ச்சி கொடுத்த நடிகர் மீது பிரபல ஹீரோயின் பரபரப்பு புகார்!

By

ஐதராபாத்: திருமணம் செய்துகொண்டதாகவும் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் தன்னைப் பற்றிய பொய்யாகக் கூறிய நடிகர் மீது, பிரபல ஹீரோயின் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில், சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.

தொடர்ந்து சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்தில் நடித்திருந்தார்.

அதர்வா ஜோடியாக

அதர்வா ஜோடியாக

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், அங்கு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், லாவண்யா திரிபாதி. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்கி வருகிறார்.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இந்த படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் இருப்பவராக நடிக்கிறார். இவரை ஒரு கும்பல் திடீரென்று கடத்திச் செல்ல, ஹீரோ காப்பாற்றுவது போல இதன் கதை அமைப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை லாவண்யா திரிபாதி, சுனிசித் என்ற நடிகர் மீது சைபர் கிரைம் போலீஸில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

3 முறை கருக்கலைப்பு

3 முறை கருக்கலைப்பு

சுனிசித் என்ற நடிகர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், லாவண்யா திரிபாதி, தமன்னா உட்பட சில நடிகைகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இருந்தார். அதோடு லாவண்யா தன்னை திருமணம் செய்துகொண்டார் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் மூன்று முறை அவர் கருக்கலைப்பு செய்தார் என்றும் பின்னர் லாவண்யா, என்னை பிரிந்து விட்டார் என்றும் கூறியிருந்தார்.

கேவலமான

கேவலமான

இந்த வீடியோ டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து அந்த நபர் தன்னைப் பற்றி கேவலமான, பொய்யான கருத்துகளை தெரிவித்துள்ளதாக, நடிகை லாவண்யா இமெயில் மூலமாக, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி, சைபர்கிரைம் உதவி கமிஷனர் கேவிஎம் பிரசாத் கூறும்போது, புகாரை பதிவு செய்துள்ளோம். விசாரணை நடக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X