மீண்டும் தமிழுக்கு வரும் லாவண்யா திரிபாதி.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: சசிகுமாரின் பிரம்மன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான லாவண்யா திரிபாதி, மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

'Sweet and Strong' | Actress lavanya shared workout video insta

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை லாவண்யா திரிபாதி.

மனம், மிஸ்டர், ராதா, யுத்தம் சரணம், இன்டெலிஜென்ட் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அழகி பட்டம்

அழகி பட்டம்

கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில், மிஸ் உத்தர்காண்ட் பட்டத்தை தட்டிச் சென்றவர் நடிகை லாவண்யா திரிபாதி. அழகி பட்டம் வென்ற லாவண்யா திரிபாதி, 6 ஆண்டுகள் கழித்து, 2012ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அண்டள ராக்‌ஷசி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார்.

இந்தி சீரியல்

இந்தி சீரியல்

உ.பி.,யில் உள்ள அயோத்யாவில் பிறந்த லாவண்யா திரிபாதி, மிஸ் உத்தர்காண்ட் பட்டம் பெற்ற பிறகு, 2006ம் ஆண்டு இந்தியில் வெளியான உஷ் கோய் ஹை எனும் சீரியலில் அறிமுகமானார். தொடர்ந்து, கெட் கார்ஜியஸ், பியார் கா பந்தன் மற்றும் சிஐடி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ் படம்

தமிழ் படம்

2014ம் ஆண்டு இயக்குநர் சாக்ரட்டீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்தில் காயத்ரி எனும் கதாபாத்திரம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லாவண்யா திரிபாதி. பின்னர், சி.வி. குமார் இயக்கத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வெளியான மாயவன் படத்தில் நடித்துள்ளார்.

ஹீரோ யார்

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் லாவண்யா திரிபாதி. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார். சத்தம் காட்டாமல் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நடைபெற்று வருவதாகவும், விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

என்ன கதை

என்ன கதை

ரவீந்த்ரா மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது, அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. ஆனால், இது வெறும் நாயகியை ஹீரோ காப்பாற்றும் கதையல்ல, லாவண்யாவுக்கு படத்தில் முக்கிய பங்கு இருக்கிறது என ரவீந்த்ரா தெரிவித்துள்ளார்.

அதர்வா

அதர்வா

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில், ஆர். கண்ணன் இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் அதர்வா 'தள்ளிப் போகாதே' படத்திலும், லாவண்யா திரிபாதியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். விரைவிலேயே தமிழ் சினிமாவில் நல்ல கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X