சல்மானை கொல்ல ரூ.4 லட்சத்திற்கு துப்பாக்கி வாங்கினோம்.. திடுக்கிடும் தகவலை சொன்ன லாரன்ஸ் பிஸ்னோய்!
மும்பை : நடிகர் சல்மான்கான் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார்.
தற்போது பிரபல பாடகர் கொலை செய்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார் லாரன்ஸ் பிஸ்னோய்.
இந்நிலையில் சல்மானை கொல்லவும் திட்டமிட்டதாக லாரன்ஸ் பிஸ்னோய் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் கொலை வழக்கு
பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா. இவர் சில தினங்களுக்கு முன்பு சதித்திட்டம் தீட்டப்பட்ட கொலை செய்யப்பட்டார். கடந்த மே மாதம் 29ம் தேதி பிரபல பாடகரும் அரசியல்வாதியுமான சித்து அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திட்டமிட்ட சதி
அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வளையத்தை பஞ்சாப் அரசு குறைத்த மறுநாளே இந்த கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து இந்தக் கொலை வழக்கில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஸ்னோயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கனடாவை சேர்ந்த கோல்டி பிரார் உள்ளிட்ட தன்னுடைய கேங்கை சேர்ந்தவர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பதாக லாரன்ஸ் பிஸ்னோய் தெரிவித்துள்ளார்.

முன்விரோதம் காரணம்
பிஸ்னோய்க்கும் தனக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவரை கொல்ல ஆள் அனுப்பியதாகவும் அவர் மேலும் கூறினார். முன்னதாக அகாலிதள இளைஞர் பிரிவு தலைவர் விக்ரம்ஜித் சிங் கொலை வழக்கில் சித்துவிற்கு தொடர்பு இருந்ததாகவும் அதன் காரணமாகவே தனக்கும் அவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாகவும் லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

சல்மானை கொல்ல துப்பாக்கி
ஆனாலும் இந்தக் கொலையின் உள்நோக்கம் குறித்து அவர் விரிவாக கூறிவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 2018ல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல தான் 4 லட்சம் ரூபாயில் துப்பாக்கி வாங்கியதாக திடுக்கிடும் தகவலை லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சல்மானுக்கு கொலை மிரட்டல்
சல்மானை கொல்ல தன்னுடைய கூட்டாளி சம்பட் நெஹ்ராவிற்கு தான் உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அரியவகை மான்களை வேட்டையாடிய சம்பவத்தில் அவரை கொல்ல தான் முடிவெடுத்ததாகவும் லாரன்ஸ் தெரிவித்திருந்தார். முன்னதாக சல்மான் மற்றும் அவரது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.

மதிப்பிற்குரிய மான்கள்
சல்மான் கொலை செய்த அரியவகை மான்கள், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபை சேர்ந்த பிஸ்னோய் பிரிவினரின் விருப்பத்திற்குரியவை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே சல்மானை கொல்ல தங்களுடைய கேங் முடிவெடுத்து செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

மான் வேட்டையாடிய சல்மான்
ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் சிறையில் உள்ள நிலையில், இவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்தான் இந்த தகவலை அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 1998ல் தனது படத்தின் படப்பிடிப்பின்போது இந்த மான் வேட்டையில் சல்மான் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











