முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவுடன் இணையும் எல்வின்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை : ராகவா லாரன்ஸ் நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முக திறமையை காட்டி வருகிறார்.

கடந்த ஆண்டிலேயே இவரது சகோதரர் கோலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளதாக கூறப்பட்டது.

இன்றைய தினம் எல்வின் தனது பிறந்ததினத்தை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவரது கோலிவுட் என்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பன்முக திறமை

பன்முக திறமை

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது காமெடி கலந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருபவர். வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர். மேலும் தயாரிப்பாளர், நடிப்பு, டைரக்ஷன் மற்றும் நடன இயக்குநர் என்று பன்முகத் திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

எல்வின் பிறந்ததினம்

எல்வின் பிறந்ததினம்

இன்று இவரது சகோதரர் எல்வின் தனது பிறந்ததினத்தை கொண்டாடி வருகிறார். இதையொட்டி லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருவரும் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் அனைவரின் வாழ்த்துக்களையும் கோரியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த ஆண்டு எல்வின் பிறந்தநாளிலேயே அவர் கோலிவுட்டில் தனது அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார் லாரன்ஸ். அதை தானே தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் எல்வின் பிறந்தநாளில் அவரது படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் ஹீரோ நடிப்பு

மாஸ் ஹீரோ நடிப்பு

பெயரிடப்படாத இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக படத்தை தயாரிக்கவுள்ள டெல்லி பாபுவின் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் படத்தில் ராஜ்கிரண் மற்றும் மாஸ் ஹீரோ ஒருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X