ரெபல் பட வழக்கு: ராகவா லாரன்சுக்கு முன்ஜாமீன்
ஹைதராபாத்: நடிகர் லாரன்ஸுக்கு எதிராக தெலுங்குத் தயாரிப்பாளர்கள் போட்ட வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
ராகவா லாரன்ஸ் தெலுங்கில் இயக்கிய படம் ரெபல். இந்த படத்தை ரூ.22.5 கோடி செலவில் எடுத்து முடிப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கே.பகவான், புல்லாராவ் ஆகியோருடன் ஒப்பந்தம் போட்டிருந்தாராம்.

ஆனால், தயாரிப்பு செலவு நிர்ணயித்ததை விட அதிகமாகிவிட்டதாம்.
இதையடுத்து ஒப்பந்தத்தை மீறி செலவு செய்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக பட அதிபர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். ஜூப்ளி ஹில்ஸ் போலீசிலும் புகார் தந்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ராகவா லாரன்ஸ். மனுவை விசாரித்த நீதிபதி, லாரன்சுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications