தம்பிக்கு கார் வாங்கிக் கொடுத்த லாரன்ஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் தனது தம்பிக்கு அவர் கார் பரிசாக கொடுத்திருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது.
டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து பல படங்களில் நடன அமைப்பாளராக மாஸ் காட்டினார். அதுமட்டுமின்றி அமர்க்களம், திருமலை உள்ளிட்ட படங்களின் பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ஜிகர்தண்டா 2 வெளியானது. அடுத்ததாக பென்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
உதவி: லாரன்ஸ் நடிப்போடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். பல சிறுவர்களின் படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருவது என பலரது பாராட்டை பெற்றிருக்கிறார். சிறுவயது முதல் தான் படிக்க வைத்து இப்போது டிகிரி முடித்திருக்கும் இளைஞரை அறிமுகப்படுத்தி சமீபத்தில்கூட வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோல் மாடல்: அதேபோல் இப்போது அதிக உதவிகளை செய்துவரும் கலக்கப்போவது யாரு பாலாவும் தனது ரோல் மாடல் ராகவா லாரன்ஸ்தான். அவர் சொன்னால் மாடியிலிருந்துகூட குதிப்பேன். அவர் ஒரு ஷங்கர் படம் மாதிரி பிரமாண்டமானவர். நான் ஷார்ட் பிலிம் மாதிரியானவன் என்று ராகவா லாரன்ஸை அண்மையில் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தம்பிக்கு பரிசு: இந்நிலையில் ஊருக்கெல்லாம் உதவி செய்த லாரன்ஸ் இப்போது தனது தம்பிக்கு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அதாவது நடிகர் எல்வினுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். எல்வின் இப்போது புல்லட் என்ற படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் காட்சிகளை பார்த்த லாரன்ஸ்; எல்வினின் நடிப்பை உற்சாகப்படுத்தும் விதமாக கார் பரிசளித்திருக்கிறார். புல்லட் படத்தை டைரி படத்தின் இயக்குநர் இன்னிசி பாண்டியன் இயக்கிவருகிறார்.


Click it and Unblock the Notifications











