Lawrence - அந்த வாய்ப்பு முதலில் எனக்குதான் வந்தது ஆனா மிஸ் பண்ணிட்டேன் - லாரன்ஸ் ஓபன் டாக்

சென்னை: Lawrence (லாரன்ஸ்) விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தனம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் என்னைதான் அணுகினார்கள் ஆனால் அந்த வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டதாக லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

Lawrence is the first choice to play santhanam character in vikram movie

லாரன்ஸின் அவதாரங்கள்: இதனையடுத்து சில பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது.

ருத்ரன்: லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அவருக்கு பலத்த அடியை கொடுத்தது. தற்போது அவர் ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த கதிரேசன் இயக்கியிருக்கும் இந்தப் படமானது முதலில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

Lawrence is the first choice to play santhanam character in vikram movie

விக்ரம் பட வாய்ப்பு: இந்நிலையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடிக்க மிஸ் ஆனது குறித்து லாரன்ஸ் பேசியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், "விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தனம் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது. கால்ஷீட் இல்லாததால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இருப்பினும் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக வருத்தம் எதுவும் இல்லை. விரைவில் லோகேஷ் கனகராஜ் கதை, வசனத்தில் ரத்ன குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளேன்" என தெரிவித்தார். இந்தப் படம்தான் லோகேஷ் தயாரிக்கும் முதல் படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Lawrence is the first choice to play santhanam character in vikram movie

மாஸ் ஹிட்டான விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் விக்ரம். கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் இயக்கிய அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதுமட்டுமின்றி 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படத்தின் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநராக மாறினார்.

லியோ: அவர் இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். த்ரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். காஷீரில் ஷூட்டிங் முடிந்த சூழலில் இப்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X