Just In
- just now
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
- 1 hr ago
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
- 1 hr ago
கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!
- 2 hrs ago
கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு
Don't Miss!
- Sports
நடந்த 5 மேட்சுலயும்.. "மேன் ஆப் மேட்ச்" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ?
- Finance
வாகன அழிப்பு திட்டத்தினால் கார் இன்சூரன்ஸ் பிரீமியமும் குறையலாம்.. எப்படி..!
- News
'தமிழன்டா எந்நாளும்!'... மாஸ் லூக்கில் சின்ன தல பதிவிட்ட வைரல் போட்டோ... 'தல' தோனி மட்டும் மிஸ்ஸிங்
- Lifestyle
நீங்கள் எடையை குறைக்க எடுத்துக்கொள்ளும் இந்த டயட் உங்கள் உடல் எடையை அதிகரிக்கத்தான் செய்யுமாம்...!
- Automobiles
அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாருக்கு ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளனர்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஒருநாளைக்கு ஒரு பிரபலம் என்ற வரிசயையில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டவர்கள் என நடிகர்கள் இயக்குனர்கள் பெயரை வெளியிட்டு வருகிறார்.

அட என்னம்மா நீ.... சும்மா பேரை மட்டும் வெளியிட்டுகிட்டு இருக்க, சட்டுபுட்டுன்ன்னு சுச்சிக்லீக்ஸ் மாதிரி இந்நேரம் வீடியோவை வெளியிட்டு வைரலாக்க வேண்டாமா என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் தட்டுகின்றனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து பதிவிட்ட ஸ்ரீரெட்டி ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐதராபாத் தி பார்க் ஹோட்டலில், செலிபிரட்டி கிரிக்கெட் லீக் பார்ட்டியில் சந்தித்தது நியாபகம் இருக்கிறதா ஸ்ரீகாந்த்? நீங்க கூட எனக்கு வாய்ப்பு தர்றதா சொல்லி... (பொதுநலன் கருதி அவர் சொன்ன வசங்கள் இங்கே சென்சார் செய்யப்படுகிறது) என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீகாந்த், அவ்வாறு நடந்திருந்தால் ஏன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதைக் கூறவேண்டும்? எனக்கு நடிகைகளை சிபாரிசு செய்யும் பழக்கம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராகவா லாரன்ஸ் பற்றி ட்வீட்டிய நடிகை ஸ்ரீரெட்டி, ஐந்து வருடங்களுக்கு முன்பு கோல்கோண்டா ஹோட்டலில் நண்பர் ஒருவரின் மூலம் லாரன்ஸை சந்தித்ததாகவும், அவர் ஏழை சிறுவர்களுக்கு உதவுவதாக சொன்னதால் வாப்பு தருவார் என நம்பி அவருடன் இணக்கமாக இருந்ததாகவும், அதன்பிறகுதான் அவரின் உண்மை முகம் தெரிந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பதிலளித்துள்ள லாரன்ஸ், அது முற்றிலும் உண்மையில்லை. தான் தெலுங்கு படங்களுக்கு பணியாற்றியே ஐந்து வருடங்களுக்குமேல் ஆகிறது. நானி, பவன் கல்யாண் போன்ற மரியாதையான நடிகர்கள் மீது அவதூறு பரப்பும் ஸ்ரீரெட்டிக்கு பதிலளிப்பது என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்வதாகும் என தெரிவித்துள்ளார்.