லோகேஷ் கனகராஜ் இப்படி சிக்கிட்டாரே.. புலம்பும் ஸ்டார் நடிகர்.. படப்பிடிப்பு நடக்குமா?
சென்னை: மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து கைதி விக்ரம், மாஸ்டர், லியோ படங்களின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கூலி படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். இதனிடையே, லோகேஷ் தயாரிப்பில் ஸ்டார் நடிகர் நடித்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றதால் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்சியு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் மூலம் எல்சியு படங்கள் என்ற வரிசை உருவானது. இப்படத்தின் கதையின் தொடர்ச்சி கதாப்பாத்திரங்களை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களை லோகேஷ் கனகராஜ் செய்து வருகிறார். இதுவரை அவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தற்போது பென்ஸ் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

அபயன்கர்: லோகேஷ் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தை ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்தது. கட்சி சேர ஆல்பம் பாடல் மூலம் பிரபலமான அபயன்கர் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனார். பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியினரின் மகன் தான் சாய் அபயன்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
பென்ஸ்: லோகேஷ் கனகராஜ் எழுதிய கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். லோகேஷ் இயக்கும் படங்களில் மட்டுமே எல்சியூ இடம்பெறும் என தெரிவித்திருந்தார். அவர் தயாரிக்கும் பென்ஸ் படத்திலும் எல்சியூ இருப்பது ரசிகர்களை கனெக்ட் செய்யும் விதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ரபரப்பாக உருவாகி வந்த இப்படம் தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பண பிரச்னையால் படத்தினை தொடர முடியாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடுப்பான நடிகர்: ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4, காலபைரவா படங்களில் பிஸியாக இருந்தாலும் பென்ஸ் படத்திற்கும் கால்ஷீட் ஒதுக்கி நடித்து வந்தார். லோகேஷ் கனகராஜ் மீதான நம்பிக்கையுடன் நடித்து வந்தவருக்கு பண பிரச்னையில் நின்றதால் அப்செட் ஆகியுள்ளாராம். தற்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி நடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளார். சம்மரில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பட நடிகையும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதால், காஞ்சனா 4 மார்க்கெட்டும் பெரிய லாபம் பார்க்கும் என கூறப்படுகிறது.
பாதியில் நின்ற படங்கள்: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் முதல் ரஜினி வரை பல படங்கள் படப்பிடிப்பு நடந்து பாதியில் நின்ற அனுபவங்கள் ஏராளம் நடந்துள்ளன. எம்ஜிஆர் நடிப்பில் உருவான ஊமையன் கோட்டை, அன்று சிந்திய ரத்தம், ரிக்ஷா ரங்கன், லலிதாங்கி, சிரிக்கும் சிலை, இதுதான் என் பதில், நல்லதை நாடு கேட்கும், மாடி வீட்டு ஏழை, இணைந்த கைகள் ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அதேபோன்று கமல்ஹாசனுக்கு, பல படங்கள் பெட்டியிலேயே முடங்கி உள்ளன. அதிவீரபாண்டியன், கண்டேன் சீதையை, லேடீஸ் ஒன்லி, அமர காவியம், மருதநாயகம், லண்டனில் காமேஸ்வரன் ஆகிய படங்களை குறிப்பிடலாம்.

வருத்தம்: லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தில் பிஸியாக இருந்தாலும், யூடியூபர் பரத், பென்ஸ் படங்களை தயாரித்து வந்தார். பரத் நடிக்கும் படத்தே காட்டிலும் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் பட்ஜெட் அதிகரித்து போனதால் படப்பிடிப்பு நின்றதாகக் கூறப்படுகிறது. கூலி படத்திற்கு பின்பு மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற முடிவில் லோகேஷ் இருக்கிறாராம். படம் தயாரித்து இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற பயமும் அதிகரித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











