மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி நினைத்தால் எல்லாம் ஓவர்.. 2வது கல்யாணம் செல்லாது.. வழக்கறிஞர் அதிரடி
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணமாகிவிட்டது; தான் ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறேன் என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தெரிவித்தது பெரிய விவாதமாகியது. அதுகுறித்து ரங்கராஜ் எதுவும் கூறவில்லை. அதேசமயம் முதல் மனைவியை அவர் விவாகரத்தும் செய்யவில்லை. அதுமட்டுமின்றி நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடனும் வந்திருந்தார்.
மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ்; அதற்கும் முன்னதாக தமிழ்நாட்டில் பிரபலம்தான். தனது தந்தை வழியில் சமையல் கலையை வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து அதில் வென்றுகாட்டினார். தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான செலிபிரிட்டிகள் வீட்டு விசேஷம் என்றால் அங்கே மாதம்பட்டி ரங்கராஜின் டீம் கிச்சனில் களமிறங்கியிருக்கும். அதேபோல் படங்களின் வெற்றி விழாவுக்கும் அவரது கை பக்குவம்தான்.
திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ்: இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அவர் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அதுமட்டுமின்றி கட்சி ஒன்றில் பொறுப்பும் வகித்துவருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணமாகி எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமூகமாகத்தான் அவர்களது வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது.

அடுத்த திருமணம்: இப்படிப்பட்ட நிலைமையில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டியாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியது. சூழல் இபப்டி இருக்க திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தானும், ரங்கராஜும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார் ஜாய். மேலும் ஆறு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறேன் என சொல்லியும் குண்டை தூக்கி போட்டார். ஸ்ருதியை ரங்கராஜ் டைவர்ஸ் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனைவியுடன் வந்த ரங்கராஜ்: மாதம்பட்டியின் இந்த செய்கை பலரிடமும் விமர்சனத்தை கிளப்பியது. அதுமட்டுமின்றி அவரும் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க கோவையில் நேற்று விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவுக்கு தன்னுடைய முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்திருந்தார். இரண்டாவது திருமணம் நடந்துவிட்டதாக ஃபோட்டோ வெளியான நிலையில்; முதல் மனைவியுடன் வந்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் என்ன பிளானில்தான் இருக்கிறார் என்ற கேள்விகளையும் ரசிகர்கள் முன்வைக்க தொடங்கியிருக்கிறார்கள்.
வழக்கறிஞர் பேட்டி: இந்நிலையில் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில், "ரங்கராஜும், கிரிஸில்டாவும் செய்திருக்கும் திருமணம் செல்லாது. இது பெரிய தண்டைக்குரியது என்றும் நான் சொல்லவில்லை. அதேபோல் கிரிஸில்டா நிறைய சம்பாதித்திருக்கலாம்; செலிபிரிட்டிகளின் பழக்கம் வைத்திருக்கலாம். ஆனால் அவருக்கு சட்டப்பூர்வமாக இந்தத் திருமணத்தில் எந்த உரிமையும் இல்லை.
ஸ்ருதி நினைத்தால் அவ்வளவுதான்: முக்கியமாக மனைவி என்ற உரிமையே சட்டப்படி கிரிஸில்டாவுக்கு கிடைக்காது. இப்போது ஸ்ருதி இவர்கள் மேல் வழக்கு தொடரலாம். அடல்ட்ரியில் இருக்கும்போது ஸ்ருதி கேஸ் போடலாம். எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரலாம். அதேசமயம் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்தப் பெண்ணை பொறுத்தவரை அந்தப் பெண்ணின் மாமா அவரிடம் சென்று சேர வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











