LCU: அன்றே கணித்தார் சூர்யா.. எல்சியூ முழுக்கவே அந்த ஒரு படத்தில் இருக்கே பார்த்தீங்களா?
சென்னை: மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என்பது போல அன்றே கணித்தார் சூர்யா டெம்பிளேட் எல்சியூவுக்குள்ளும் வந்து விட்ட வீடியோ மீம் தான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
எல்சியூவில் இடம்பெற்ற பார்த்திபன், தாஸ், டில்லி, ரோலக்ஸ் என அனைத்துமே சூர்யா நடிச்ச படத்தில் இருந்து தான் லோகேஷ் கனகராஜ் சுட்டு இருக்கிறார் என்றும் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
அந்த அளவுக்கு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த அயன் படத்தில் ஒட்டுமொத்த எல்சியூவும் அடங்கியிருப்பதாக தரமான எடிட் உடன் வீடியோ மீமை சூர்யா ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர்.
எல்சியூ: லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஆன எல்சியூவில் இதுவரை கைதி, விக்ரம் மற்றும் லியோ என 3 படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த மூன்று படங்களில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் என அனைத்துமே சூர்யா நடித்த அயன் படத்தில் இடம் பெற்றிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
லியோ பார்த்திபன்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் பார்த்திபன் எனும் பெயரில் விஜய் நடித்திருந்த நிலையில், அயன் படத்தில் கஸ்டம் அதிகாரியாக நடித்திருந்த பொன்வண்ணன் பெயர் பார்த்திபன் என்றிருக்கும் என்பதை ரசிகர்கள் நோட் பண்ணி எடிட் செய்துள்ளனர்.

பிரபு தான் தாஸ்: அயன் படத்தில் தாஸ் கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பார். அதை வைத்து தான் தாஸ் அண்ட் கோ என்றும் ஆண்டனி தாஸ், ஹரோல்ட் தாஸ் மற்றும் லியோ தாஸ் என லோகேஷ் டெவலப் செய்துள்ளார் என்றும் டிகோடிங் செய்து வருகின்றனர்.
கைதி டில்லி: அயன் படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக நடித்த ஜெகன் பெயர் படத்தில் டில்லி என்று இருக்கும் அதை வைத்துத் தான் கைதி படத்தில் டில்லி என லோகேஷ் வைத்திருக்கிறாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ரோலக்ஸ்: சூர்யா தான் எல்சியூவில் மிகப்பெரிய வில்லன் என லோகேஷ் கனகாராஜ் சொல்லவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கவும் சூர்யாவையே லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி உள்ளார் என்றும் போதை மருந்து கதையும் அந்த படத்தில் இருந்து தான் லோகேஷ் இன்ஸ்பயர் ஆகி உள்ளார் என்றும் அனைத்தையும் அன்றே கணித்தார் சூர்யா என எல்சியூவையே வச்சு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











