Leo 2: விஜய் நடிக்கலனா என்ன? லியோ 2 படத்தை இப்படிக் கூட எடுக்கலாம் போலயே! அட்டகாசமான ஐடியா!
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி என மொத்தம் 6 படங்களை இயக்கியுள்ளார். இதில் மாநகரம், மாஸ்டர் மற்றும் கூலி போன்ற படங்கள் ஸ்டேண்ட் அலோன் படங்கள். அதேபோல், கைதி, விக்ரம் மற்றும் லியோ என இந்த மூன்று படங்களும் LCU என்ற லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் உலகத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படி இருக்கும்போது LCUவின் கடைசி அத்தியாயம் எப்படி இருக்கும் என்று தேஜாய் என்ற இணையதள வாசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கற்பனை புகைப்படங்களை AI-யில் உருவாக்கி பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான LCU படம் என்றால் அது விஜய் நடிப்பில் வெளியான லியோ. அதன் பின்னர் வெளியான கூலி படம், ரஜினி கேட்டுக் கொண்டதால், ஸ்டாண்ட் அலோன் படமாக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, லோகேஷ் கனகராஜ் தற்போது கைதி 2 படத்தின் கதையாக்கப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படமும் LCU திரையுலகத்திற்குள் வரும் படம் தான் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார். இதனால் இவரது லியோ கதாபாத்திரம் இல்லாமல், LCU படத்தை லோகேஷ் கனகராஜ் எப்படி நகர்த்திக் கொண்டு போகப் போகிறார் என்ற கேள்வி பலரையும் ஆட்கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது, இணையவாசி, தேஜாய் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள AI புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அட்டகாசமான புகைப்படங்கள்: லியோ -2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றால், இதில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, அர்ஜுன் தாஸ், ஃபகத் ஃபாசில் என பலரும் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது போன்ற AI புகைப்படங்களை உருவாக்கி பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகவும் தத்ரூபமாக இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். விஜய்,கமல், கார்த்தி, ஃபகத் ஃபாசில் இணைந்து பேசிக் கொண்டு இருப்பது போலவும், விஜய் மற்றும் சூர்யா சண்டை செய்வது போலவும், கார்த்தி சூர்யா சண்டை செய்வது போலவும் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: அதேபோல், கமல், சூர்யா, விஜய், கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் என அவர்கள் ஐந்து பேரும், மானிடரைப் பார்த்துக் கொண்டு உரையாடிக் கொண்டு இருப்பது போன்ற AI புகைப்படமும் உருவாக்கி உள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவர் உருவாக்கி உள்ள AI புகைப்படங்கள், நிஜத்தில் நடக்க வேண்டும் என்றால் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











