Coolie: LCU-வில் இருக்கா? வழக்கம்போல் நடுராத்திரியில் ட்வீட் போட்ட லோகி.. அதைச் சொல்லுங்க முதலில்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படமான கூலி படம் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் வரவேற்க காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படி இருக்கையில் இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU-வில் வருகிறதா இல்லையா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பக்கத்திற்கு கடிதமே எழுதியுள்ளார்.

அவர் அந்த கடிதத்தில், " கூலியின் வெளியீட்டிற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், நான் மிகவும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளேன். எனது தலைவர், ரஜினிகாந்த் சார், எனக்கு முழு creative சுதந்திரத்தை வழங்கி, எனது கனவை அவர் மூலம் நனவாக்கும் வாய்ப்பை தந்ததற்கு எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயணத்தை மேலும் நினைவுபடுத்தத்தக்கதாக்கிய அற்புதமான கலைஞர்களான - கிங் நாகார்ஜுனா சார், ரியல் ஸ்டார் உபேந்திரா சார், சௌபின் சார், சத்யராஜ் சார், ஸ்ருதி ஹாசன் மற்றும் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த எனது அன்பு ஆமிர் கான் சார், அவர்களது பங்கு இதை மேலும் சிறப்பாக்கி உள்ளது.

Director Lokesh Kanagaraj Wrote Letter Just Before FDFS About Rajinikanth Coolie Is Stand Alone Movie

நன்றி: எனது குழுவினருக்கும் எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு ஒரு பலத்த தூணாகவும், அர்ப்பணிப்புடனும் இருந்து இந்த கனவை நனவாக்க உதவியுள்ளனர். ஒவ்வொரு நபருக்கும், இந்த படத்தில் ஏதாவது ஒரு பங்களிப்பை அளித்தவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றி கடன் பட்டிருப்பேன். சன் பிக்சர்ஸ் மற்றும் கலாநிதி மாறன் சாருக்கு எனது உள்ளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த படத்திற்காக கலாநிதி மாறன் சார் என்னை நம்பி, என் இஷ்டத்திற்கு முழுமையாக உருவாக்க அனுமதித்ததற்கு மிகப்பெரிய நன்றிகள்.


LCU : கண்ணன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முழு குழுவினருக்கும் எனது நன்றி, நான் என்றென்றும் நன்றி கடன் பட்டிருப்பேன். எனது குழுவினரான த ரூட், ஜெகதீஷ், ஐஸ்வர்யா மற்றும் ராதேயன் ஆகியோர் படத்திற்கான நடிகர்களை அடைய உதவியதற்கு சிறப்பு நன்றி. எனது அன்பு ரசிகர்களுக்கு, நீங்கள் எனக்கும் இந்த படத்திற்கும் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. கூலி சில மணி நேரங்களில் உங்கள் சொந்தமாகும். நான் உங்களுக்கு ஒரு அற்புதமான திரையரங்க அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன் மற்றும் படத்தின் ஸ்பாய்லர்களை பகிர்வதில் இருந்து தயவு செய்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கூலி எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் தனிப்பட்ட படமாகும்" என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தில் இருந்து கூலி படம் LCU வில் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. இதனாலே ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகிறார்கள்.

Director Lokesh Kanagaraj Wrote Letter Just Before FDFS About Rajinikanth Coolie Is Stand Alone Movie
Photo Credit:

வாழ்த்து: அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்தும் பதிவிட்டுள்ளார். அதில், " என்னுடைய திரைப்பயணத்தில் கூலி எப்போதும் ஸ்பெஷல் படமாக இருக்கும். உங்களுடன் இருந்த தருணங்களை எப்போதும் என்னால் மறக்க முடியாது. எங்களை ஊக்குவித்துக் கொண்டே இருப்பதற்கு நன்றி. We Love You Thalaiva" என பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X