Leader Box Office: மூன்றே நாளில் பட்டையைக் கிளப்பிய லீடர் வசூல்.. அதிகாரப்பூர்வமாக சொன்ன படக்குழு
சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த 3ஆம் தேதி வெளியான படம் லீடர். லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஷியாம், லால், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வெளியான படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், முதல் மூன்று நாட்களில் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லீடர் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான காலத்தில் இருந்தே படத்தின் மீது ஏற்பட்ட நம்பிக்கையை படக்குழு காப்பாற்றிவிட்டது என்று கூறும் அளவுக்கு படத்தின் கதை மற்றும் திரைக்கதை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

லீடர்: லெஜண்ட் சரவணனின் முதல் படமான தி லெஜண்ட் படமானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தாலும், படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இவரது இரண்டாவது படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் நன்றாகவே ஒர்க் - அவுட் ஆகி உள்ளது. அதாவது, படத்தை மையக் கதாபாத்திரமான லெஜண்ட் சரவணனின் கதாபாத்திரத்துடன் மற்ற கதாபாத்திரங்களைக் கொண்டும் வலுவாக அமைக்கப்பட்ட திரைக்கதை படத்தை வெற்றிகரமான படமாக மாற்றி உள்ளது. இயக்குநரின் இயக்கம், லெஜண்ட் சரவணனின் நடிப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடிப்பு ரசிகர்களால் பெருமளவு பாராட்டப்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டினர்.
வரவேற்பு: படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் படத்திற்கு பெருமளவில் ரசிகர்கள் பட்டாளம் கொடுத்த ஆதரவால் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 25 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் வாரத்திலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அடுத்த வாரம்: அடுத்த வாரத்தில் TN 2026, LIK உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளதால் வார இறுதி வரைக்கும் லீடர் படம் தாக்குப்பிடித்தால் அடுத்த வாரத்திலும் படத்தின் வசூலானது அதிகரிக்கும் என்று படக்குழு எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் படம் மூன்று நாட்களில் ரூபாய் 25 கோடிகள் வசூலித்துள்ளதால் படம் வெற்றியை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ளது என்று மகிழ்ச்சியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











