Leader Day 1 Box Office - லெஜெண்ட் சரவணனின் லீடர் முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர்

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் திரைப்படம் லீடர். இதில் அவருடன் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்க; ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்போடு நேற்று படமானது ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்களிடையே ஓரளவுக்கு டீசன்ட்டான வரவேற்பே கிடைத்திருப்பதால்; அண்ணாச்சி ரொம்பவே ஹேப்பியில் இருக்கிறாராம். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் தொழிலதிபர்களில் ஒருவரான லெஜெண்ட் சரவணன்; தனது கடை விளம்பரத்தில் தோன்றி நடித்தார். பிறகு திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட; ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் படத்தில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு வந்த அந்தப் படம் கடுமையான ட்ரோலை சந்தித்தது. முக்கியமாக சரவணனின் நடிப்பை ரொம்பவே கலாய்த்துவிட்டார்கள். அதேசமயம் முதல் படத்தில் நடிப்பவரை இப்படியெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது என ஒருதரப்பினர் அறம் போதிக்கவும் செய்தார்கள்.

Leader Box Office Day 1 86 Lakhs Opening Surprise Comeback for Legend Saravanan
Photo Credit:

துரை செந்தில்குமாருடன் கூட்டணி: முதல் படத்தில் தன்னை பலரும் கிண்டல் செய்ததை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போல. உடனடியாக அடுத்த படத்தை நல்ல இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார். அதன்படி எதிர்நீச்சல், கொடி, கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த துரை செந்தில்குமாருடன் கூட்டணி வைத்தார் லெஜெண்ட். தமிழ் சினிமாவில் துரை படத்துக்கென்று மினிமம் கியாரண்டி உண்டு. கண்டிப்பாக தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வைத்தார் சரவணன்.

ரிலீஸான லீடர்: படத்தின் ட்ரெய்லர் எல்லாம் நல்ல கவனத்தை பெற்றன. அதேபோல் படத்துக்கு விளம்பரம் செய்ததும் மெர்சலாகவே இருந்தது. இதற்கிடையே அதிக சம்பளத்துக்காகத்தான் சரவணனை வைத்து படம் எடுக்க இயக்குநர் ஒத்துக்கொண்டதாக ஒரு விமர்சனம் எழுந்தது. அதனை திட்டவட்டமாக மறுத்தார் துரை. இப்படி பல விதமான விஷயங்கள் நடந்த பிறகு நேற்று படமானது திரையரங்குகளில் ரிலீஸானது. எதிர்பார்த்த அளவுக்கு பல தியேட்டர்களில் கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
TVK Vijay: நாமினேஷனில் சொதப்பிய விஜய்.. கட்சித் தலைவருக்கு இது கூட தெரியாதானு கலாய்க்கும் நெட்டிசன்கள்!
TVK Vijay: நாமினேஷனில் சொதப்பிய விஜய்.. கட்சித் தலைவருக்கு இது கூட தெரியாதானு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

எப்படி இருக்கு படம்?: முதல் ஷோ படம் பார்த்தவர்களுக்கு பயங்கர சர்ப்ரைஸ் கிடைத்தது. இயக்குநர் துரை செந்தில்குமார்; லெஜெண்ட் சரவணனை சரியாக பயன்படுத்திவிட்டார் என்றும்; படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங், அண்ணாச்சியின் நடிப்பெல்லாம் சூப்பராக இருந்ததாக கூறினார்கள். இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று இது ரஜினி, விஜய் நடித்திருக்க வேண்டிய படம். அந்த அளவுக்கு கதை இருக்கிறது. மேக்கிங்கிலும் சூப்பர் என்றும் புகழ்ந்தார்கள். எப்படியோ படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்த காட்சிகள் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.

வசூல் என்ன?: இதன் காரணமாக லெஜெண்ட் க்ரூப் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறதாம். படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. வசூலிலும் படம் டீசன்ட்டான நிலைமையிலேயே இருக்கிறது. முதல் நாளான இந்தப் படம் நேற்று மொத்தம் 86 லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது. லெஜெண்ட் சரவணனின் மார்க்கெட்டுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் என்பது நல்ல விஷயம்தான். இந்தப் படத்தின் வெற்றி கண்டிப்பாக அவருக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்பது உண்மை. மேலும் இதேபோல் அடுத்தடுத்து படங்கள் நடிக்கவும் உத்வேகமாகவும் அமையும்.

More from Filmibeat

Read more about: leader legend saravanan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X