Leader Day 2 Box Office - லீடர் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் லெஜண்ட்

சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் திரைப்படம் லீடர். இதில் அவருடன் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக சொதப்பி வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு படம் பெரிய சர்ப்ரைஸை கொடுத்தது. இதன் காரணமாக படத்துக்கு நாளுக்கு நாள் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் அதிகரிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் முதலில் விளம்பரங்களில் தோன்றி நடிக்க ஆரம்பித்தார். அதில் அவருடன் ஹன்சிகா மோத்வானி, தமன்னா உள்ளிட்டோர் தோன்றினார்கள். அதனையடுத்து ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் விளம்பரங்கள் எல்லாம் பயங்கர ரிச்சாக இருந்தன. எல்லோரது கவனமும் அந்தப் படத்தில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது.

Leader Box Office Day 2 Legend Saravanan s Film Sees Big Jump Earns Nearly 2 Crore in 2 Days
Photo Credit:

தோல்வி மட்டுமில்லை: அந்தப் படம் தோல்வியை மட்டும் சந்திக்கவில்லை; கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. சரவணனின் நடிப்பு, டயலாக் டெலிவிரி, எஸ்பிரஷன் உள்ளிட்டவை எல்லாம் பெரும் கிண்டல்களை சந்தித்தன. இவரெல்லாம் ஏன் நடிக்க வருகிறார்; பணம் இருந்தால் நல்ல படங்களை தயாரிப்பதோடு நிறுத்திக்கொள்ள் வேண்டியதுதானே என்று ஓபனாகவே பேசினார்கள். இந்த கிண்டல்களை எல்லாம் பார்த்த லெஜண்ட் சரவணன் எப்படியாவது வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார்.

துரை செந்தில்குமாருடன் லீடர்: அந்தவகையில் தனது இரண்டாவது படத்துக்கான இயக்குநர் தேர்வில் கவனமாக இருந்தார் அவர். அதன்படி எதிர்நீச்சல், கொடி, கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி கவனம் ஈர்த்த துரை செந்தில்குமாருடன் கூட்டணி அமைத்தார். இதில் அவருடன் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்ட சீனியர் நடிகர்களும், நடிகைகளும் நடிக்க கமிட்டானார்கள். யாரின் கிண்டலுக்கும் ஆளாகாமல் எப்படி லெஜண்ட்டை பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

Also Read
Vijay: விஜய்யை நோக்கி கண்ணாடியை வீசிய ரசிகர்.. தளபதி மாஸ் பண்ணீட்டாப்ளயே!
Vijay: விஜய்யை நோக்கி கண்ணாடியை வீசிய ரசிகர்.. தளபதி மாஸ் பண்ணீட்டாப்ளயே!

சரவணனும் சூப்பர்: லெஜண்ட் சரவணனும் இயக்குநருக்கு நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்திருப்பது ஸ்க்ரீனை பார்க்கும்போது தெரிகிறது. ஒரு குழந்தைக்கு தந்தையாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தின் திரைக்கதையும் அவருக்கு ஏத்தது மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. இப்படி படத்தின் மேக்கிங் எல்லாம் சூப்பராக கைகொடுக்க; படம் பார்க்க சென்ற ரசிகர்கள் சர்ப்ரைஸோடு வெளியே வந்தார்கள். நேற்று முன்தினம் வெளியான படங்களிலேயே லீடர் திரைப்படம் உருப்படியாக இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் தென்பட்டன். இதன் மூலம் இப்படமானது வெற்றியடைந்திருப்பது உறுதியாகிவிட்டது.

வசூலில் என்ன நிலவரம்?: விமர்சன ரீதியாக படம் டீசன்ட்டான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் வெறும் 75 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூலித்திருந்தது. படத்துக்கு போகப்போக நல்ல விமர்சனங்கள் வந்ததாலும், வார இறுதி என்பதாலும் நேற்று படத்துக்கு நல்ல கூட்டம் வந்தது. அதன் காரணமாக ஒரு கோடியே 14 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். மொத்தம் இரண்டு நாட்களில் அந்தப் படம் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்வரை அள்ளியிருக்கிறது. இது லெஜண்ட்டை பொறுத்தவரை கண்டிப்பாக மெகா ஹிட்டுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X