லெஜெண்ட் சரவணனின் லீடர் எப்படி இருக்கு தெரியுமா?.. எக்ஸ் விமர்சனம் இதோ.. சூப்பரா இருக்காம் பாஸ்
சென்னை: தமிழ்நாட்டில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவர் லெஜெண்ட் சரவணன். சில வருடங்களுக்கு முன்பு லெஜெண்ட் என்கிற பெயரிலேயே ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மோசமான தோல்வியடைந்து கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஆண்ட்ரியா, ஷாம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படமானது இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பிரபலமான கடைகளில் ஒன்றாக இருப்பது சரவணா ஸ்டோர்ஸ். அந்தக் கடையை இப்போது நிர்வகித்து வருபவர் சரவணன். லெஜெண்ட் சரவணா என்றும் அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் சில விளம்பர படங்களில் தோன்றிவந்தார். திடீரென அவருக்கு ஹீரோவாகும் ஆசை வர; முதல் படமாக லெஜெண்ட்டில் நடித்தார். அதனை உல்லாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜே.டி - ஜெர்ரி இயக்கினார்கள். ஆனால் அந்தப் படம் பயங்கரமாக தோல்வியடைந்தது. மேலும் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது.

லீடர் சரவணன்: அவர் அடுத்ததாக லீடர் படத்தில் நடித்திருக்கிறார். இதனை எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். சரவணன் லீடு ரோலில் நடிக்க ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். முதல் படம் சந்தித்தது போல் ட்ரோல்களை சந்திக்காமல் இருந்தாலே இந்தப் படம் ஹிட்தான் என்று பலரும் நினைத்தார்கள். எப்படியாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என லெஜெண்ட் அண்ணாச்சியும் மும்முரமாக இருந்தார்.
எப்படி இருக்கு படம்?: வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் விளம்பரத்தில் மெர்சல் செய்துவிட்டார் அண்ணாச்சி. ஆடியோ வெளியீட்டு விழாவையும் பக்காவாக நடத்தி படத்துக்கு ஹைப்பை கூட்டினார். அந்த ஹைப்போடு இன்று தியேட்டர்களில் படம் ரிலீஸானது. எப்படியும் சரியாக இருக்காது என்று ரசிகர்கள் நினைத்தாலும்; ஓரத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார் மீது நம்பிக்கையும் இருந்தது. நினைத்தபடியே சரியாக லெஜெண்ட் சரவணனை பயன்படுத்தி அப்ளாளை அள்ளியிருக்கிறார். முதல் பாதியெல்லாம் சூப்பராகவே இருப்பதாக ரிசல்ட் வந்திருக்கின்றன.
ட்விட்டர் விமர்சனம்: இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். படம் பார்த்த குடலிங்கம் என்பவர், 'லீடர் படத்துக்கு ஐந்துக்கு மூன்று ஸ்டார்கள் கொடுக்கலாம். நாயகன் யார்? எதற்காக ரவுடி கும்பலிடம் வேலை செய்கிறான்? இந்த இருவருக்குள் இருக்கும் முன் விரோதம் என்ன? என்பதை சுற்றியே கதை நகர்கிறது. பொறுமையாக தொடங்கும் இரண்டாவது பாதி ப்ரீ இன்ட்டெர்வலுக்கு பிறகு சூடு பிடிக்கிறது. ரைட்டிங்கும் சில இடங்களில் நன்றாக உள்ளது. குறிப்பாக இடைவேளை மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் அருமை. ஆனால் பல காட்சிகள் அபத்தமாகவும் இருக்கின்றன. க்ளைமேக்ஸ் ட்ரெய்ன் சண்டை காட்சி மொரட்டு சம்பவம். ரத்தம் தெறிக்குது மக்கா" என குறிப்பிட்டிருக்கிறார்.
டீசன்ட்டான முதல் பாதி: படம் பார்த்த இன்னொரு ரசிகர், ' நல்ல இடைவேளை ப்ளாக்குடன் டீசன்ட்டான முதல் பாதி. 30 நிமிடங்களுக்கு பிறகு பிக் அப் ஆகி; இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்கிறது. வன்முறை நிறைந்த கடந்த காலம் கொண்ட மனிதனின் கதைதான் டெம்ப்ளேட்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி, "லீடர் முதல் பாதி அருமையாக இருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை. துரை செந்தில்குமார் சின்சியராக உழைத்திருக்கிறார்" என பதிவிட்டிருக்கிறார்.
கழுவி ஊற்றிய ரசிகர்: படம் பார்த்து அதிருப்தியடைந்த இன்னொரு ரசிகர், "ப்ரொடக்ஷன் வேல்யூ தவிர வேறு எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. நரேஷன் ரொம்பவே மோசம். பிரபலமானவர்கள் இருந்தாலும் அதை எக்ஸ்கியூட் செய்த விதம் சுமார்தான். அண்ணாச்சியின் முக பாவனைகள் எல்லாம் பார்க்க முடியவில்லை. துரை செந்தில்குமார் பெயரை நம்பி ஏமாந்துவிட்டேன்" என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications















