Leader Public Review: லெஜண்ட் படம் போல இல்லை.. லீடர் பக்கா பட்டாஸ்.. மக்கள் விமர்சனம் இதோ!

சென்னை: லெஜண்ட் சரவணா அதிக பொருட்செலவில் ஹீரோவாக நடித்த 'லெஜண்ட்' திரைப்படம் பெரிதாக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மை. ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் சரிசெய்து 2வது படத்திலேயே சரவெடியாக வெடித்துள்ளார் லெஜண்ட் சரவணா என படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் 'லீடர்' படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

இயக்குநர் துரை செந்தில்குமார் கடைசியாக சூரியை வைத்து 'கருடன்' படத்தைக் கொடுத்து 50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டினார். இந்நிலையில், அவர் லெஜண்ட் சரவணாவை வைத்து ஒட்டுமொத்த குடும்பமும் வந்து தியேட்டரில் கொண்டாடும் விதமாக ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்துள்ளார் என்றும் எங்கேயும் படம் போர் அடிக்கவில்லை என ரசிகர்களும் ரசிகைகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leader Public Review Durai Senthil Kumar and Legend Saravana gives blockbuster movie
Photo Credit:

தமிழ் சினிமாவில் ஏப்ரல் 3ம் தேதியான இன்று பல நல்ல படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸில் லீடர் திரைப்படம் லீடு செய்யும் என மக்கள் உறுதியாக கூறுகின்றனர்.

போன படம் போல இருக்காது: ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் படத்தின் மூலம் சினிமாவில் அண்ணாச்சி அறிமுகம் ஆகும் போது, இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என பலரும் கிண்டலும் கேலியும் செய்தனர். அவருடைய மேக்கப் உள்ளிட்டவை லெஜண்ட் படத்தில் சரியாக செட்டாகவில்லை. ஆனால், தாடி வைத்து லீடர் படத்தில் அவருக்கு அட்டகாசமான லுக்கை செட் பண்ண இடத்திலேயே துரை செந்தில்குமார் தனது திறமையை காட்டிவிட்டார் என்றும் படத்தையும் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி எழுதி இயக்கிய விதத்தில் கண்டிப்பாக போன படத்தை பார்த்து நொந்து போனது போல இந்த படம் இருக்கும் என நினைச்சிடாதீங்க, கண்டிப்பா குடும்பத்துடன் வந்து பாருங்க, உங்களை படம் ஏமாற்றாது என ரசிகர்கள் ஓபனாகவே விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

பக்கா பட்டாஸ்: துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா, ஷாம், ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள், கார் சேஸிங், கன்டெயினர் லாரி எல்லாம் லெஜண்ட் சரவணா ஓட்டும் காட்சியே பக்கா பட்டாஸ். டைரக்டர் ரொம்பவே மெனக்கெட்டு படத்தை எங்கேயும் சொதப்பிவிடக் கூடாது என பிரில்லியன்ட்டாக எடுத்துள்ளார். அந்த ட்ரெயின் ஃபைட் எல்லாம் வேறலெவல். அது முடிந்தும் வரும் ட்விஸ்ட் தான் ஹைலைட் என ரசிகர்கள் லீடர் படத்தை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X