அப்போ காமெடியன்.. இப்போ டைரக்டர்..! - வாக்குத் தவறாத பிரபல நடிகர்

By Vignesh Selvaraj

ஐதராபாத் : தெலுங்கு சினிமாவின் 'மாஸ் மகாராஜ்' என அழைக்கப்படும் ரவிதேஜா, கடந்த சில வருடங்களில் தொடர் தோல்விகள் மற்றும் சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியது என துவண்டுபோயிருந்தார்.

ரவிதேஜாவுக்கு அவர் நடித்து இந்த தீபாவளியன்று திரைக்குவந்த 'ராஜா தி கிரேட்' படத்தின் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தநிலையில் தனது புதிய படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை காமெடி நடிகர் ஒருவருக்கு ரவிதேஜா கொடுத்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Leading actor in comedian's direction

இயக்குனர்களையும் கதாசிரியர்களையும் புதிதாக அறிமுகப்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் இருப்பவர் ரவிதேஜா. அந்தவகையில் தன்னுடன் 'இடியட்' படத்திலிருந்து 'ராஜா தி கிரேட்' படம் வரை காமெடியனாக நடித்துவரும் ஶ்ரீனிவாஸ் ரெட்டிக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே ஶ்ரீனிவாஸ் ரெட்டி சொன்ன கதையால் இம்ப்ரெஸ் ஆகிவிட்டாரம் ரவிதேஜா. இருந்தாலும் டைரக்ஷனிலும் அனுபவம் வேண்டும் என்பதற்காக 'ராஜா தி கிரேட்' படத்தில் ஶ்ரீனிவாஸ் ரெட்டியை உதவி இயக்குனராகவும் சேர்த்துவிட்டாராம் ரவிதேஜா.

அந்தப் படம் முடிவடைந்ததும் முன்பே கூறியதைப் போல, ஶ்ரீனிவாஸ் ரெட்டியின் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரவிதேஜா. அந்தவகையில், ஶ்ரீனிவாஸ் ரெட்டிக்கு தான் கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டார் ரவிதேஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X