விவேக் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர்! - வைரலாகும் போட்டோ
சென்னை : நடிகர் விக்ரம் தற்போது அடுத்தடுத்த பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். 'ஸ்கெட்ச்', 'துருவ நட்சத்திரம்', 'சாமி 2' போன்ற படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வர இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அவருடைய நல்ல நண்பராக நீண்டகாலம் தொடர்பில் இருப்பவர் நடிகர் விவேக். விக்ரம் திடீரென்று விவேக்கின் வீட்டிற்குச் சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்தத் தகவலை நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதோடு விக்ரமுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
கென்னி சர்ப்ரைஸ்
இன்று திடீரென கென்னி (விக்ரம்) எனது வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சோ மச் ஆஃப் நாஸ்டால்ஜியா எனக் குறிப்பிட்டுள்ளார். 'கென்னி ' என குறிப்பிட்டது 'மெர்சல்' விவகாரத்தில் எச்.ராஜாவுக்கான பதிலடியாக இருக்கும் என ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
அந்த நாள் ஞாபகம்
'தூள்' படத்துல நீங்க விக்ரம் கிட்ட சொல்றமாதிரி... அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே... நண்பனே நண்பனே..!
ஜனங்களின் கலைஞன்
'ஜனங்களின் கலைஞன் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சாமி 2 னு நினைக்கிறேன்' என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சாமி 2 படத்தில் விவேக்கும் இணையவேண்டும் என ரசிகர்கள் பலர் எதிர்பார்க்கிறார்கள்.
தளபதிக்கு குரல்
தலைக்கு மட்டும் குரல் கொடுக்கிறிங்க, தளபதிக்கு கொடுக்க மாட்டேளா..? என ஒருவர் கேட்டிருக்கிறார்.
சேம் சேம்
எனக்கு எப்போதுமே பிடிச்ச சீன்... 'சேம் சேம் பப்பி சேம்'
மெர்சல் பிரச்னை
எத்தனை பேர் இதை கவனிச்சீங்க? விவேக் சார் விக்ரம் பெயரை கென்னின்னு குறிப்பிட்டிருக்கார். மெர்சல் பிரச்னைக்காகவா இருக்குமோ?


Click it and Unblock the Notifications











