நல்லா கம்பி கட்டுறீங்க.. விஜயகாந்துக்கு இதுவரை அஞ்சலி செலுத்த வராத நடிகர்கள்.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு ஒட்டு மொத்த திரைத்துறையுமாக நேரில் வந்து அஞ்சலி செலுத்திய போதும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சப்பையான காரணத்தை சொல்லி அஞ்சலி செலுத்த வரவில்லை.

மதுரையிலிருந்து சென்னை வந்த விஜயகாந்த் அவரின் நிறத்தால் பல அவமானங்களை சந்தித்த போதும், . உழைப்பை மட்டுமே மூலதனமாக நம்பிய விஜய்காந்திற்கு நிறம் ஒரு தடையாக இல்லை. ஜெயிப்பது மட்டுமே எண்ணமாக இருந்தது. ஆனால், அந்த நிறமே தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. விஜயகாந்தின் தீவிர முயற்சியால், எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த்.இதையடுத்து, ஆர் செல்வராஜ் இயக்கத்தில் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

Leading actors who have not paid tribute to Vijayakanth in person so far

சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் திரைப்பயணத்தை மாற்றியது. நடிகராக இருந்த விஜயகாந்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய இப்படம் இது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமானதும் இந்த படத்தில்தான். இதைத் தொடர்ந்து சிவப்பு மல்லி , நெஞ்சில் துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுப்பக்கம், சிவந்தகண்கள், பட்டணத்து ராஜாக்கள், ஓம்சக்தி, ஆட்டோ ராஜா என பல வெற்றிப்படங்களில் நடித்து உச்சபட்ச நடிகராக மாறினார்.

கொரோனோவால் பறிபோன உயிர்: அதன் பிறகு நடிகர் சங்கத்தின் தலைவர், அரசியல், சினிமா என படு ஆக்டிவாக இருந்த விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக முடங்கிப்போனார். அரசியல் வேலைகளை அவரது மனைவி கவனித்து வந்தார். இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் இறுதி சடங்கு நடைபெற்ற போது கோயம்பேடு சாலையே ஸ்தம்பித்து போனது. அந்த அளவுக்கு பலர் அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் கூட சொல்லாத அஜித்: ஆனால் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு என யாருமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜானில் இருக்கும் அஜித் வரமுடியவில்லை என்றாலும் பரவாய் இல்லை குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்கலாம். அது கூட செய்யாதது அஜித் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. மேலும், அஜித், பிரேமலதாவிடம் போனில் பேசியதாக சொல்லப்படுகிறது.

விளாசும் நெட்டிசன்ஸ்: சீயான் விக்ரமும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை, சூர்யா விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என சொல்லப்படுகிறது. சூர்யாவின் தம்பி கார்த்தி, அவரது அப்பா சிவகுமார் ஆகியோரும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதே போல தனுஷ், சிம்பு,சிவகார்த்திகேயன் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை. இதனால் கடுப்பான நெட்டிசன்ஸ் யார் எங்கு இருந்தால் என்ன விமானத்தில் வந்துவிட்டு அஞ்சலி செலுத்தி இருக்கலாமே. ரஜினி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வரவில்லையா என நெட்டிசன்கள் அவர்களை விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X