முன்னணி தயாரிப்பாளர்கள் நடிக்கும் அப்பா மகன் கதை...யார் அந்த அப்பா மகன் தெரியுமா ?

சென்னை : GK ரெட்டி & லோகு ஆகியோர், GS ARTS வழங்கும், தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜீன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும், "Production No.2" க்ரைம் திரில்லர் திரைப்படத்தில் இணைந்துள்ளனர் .

Recommended Video

என்னுடைய 85 வயதில் Hero வா நடிக்க போறேன் | Producer G. K. Reddy Part-03 | Filmibeat Tamil

புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்தில், நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர், நடிகர் GK ரெட்டி மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் இணைந்துள்ளனர்.

தயாரிப்பாளர், நடிகர் GK ரெட்டி இப்படத்தில் நடிகர் அர்ஜூனின் தந்தையாக நடிக்கிறார். இப்படம் க்ரைம், திரில்லர் விசாரணை வகையை சேர்ந்த படமென்றாலும், படத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தேர்வுகளுக்கு பிறகே

தேர்வுகளுக்கு பிறகே

அதிலும் முக்கியமாக அப்பா மகன் உறவு ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தில் அர்ஜூன் மற்றும் GK ரெட்டி இருவரது பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமென்று படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் கதிர் தந்தை லோகு, படத்தில் கதையின் திருப்புமுனைக்கு உதவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இரு பாத்திரங்களும் படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், இப்பாத்திரங்களை சிறப்பாக கையாளும் சிறந்த நடிகர்களை தேர்வு செய்ய வேண்டுமென படக்குழு முடிவு செய்திருந்தது. பல கட்ட தேர்வுகளுக்கு பிறகே, GK ரெட்டி மற்றும் லோகு ஆகியோரை இப்பாத்திரங்களுக்காக படக்குழு தேர்வு செய்துள்ளனர்.

இன்வெஸ்டிகேஷன்

இன்வெஸ்டிகேஷன்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் அனைத்து நடிகர்களும் பங்குகொள்ளக்கூடிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை, இது மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் அமைந்துள்ளது.

பிரபலங்கள் இணைந்து

பிரபலங்கள் இணைந்து

இப்படத்தின் தொழில் நுட்ப குழுவில் பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்), அருண் சங்கர் துரை (கலை இயக்குனர்), விக்கி (ஸ்டண்ட் மாஸ்டர்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு )பணிகளை செய்துள்ளனர். GK ரெட்டி, லோகு பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

மகனை மிஞ்சும் அப்பா

மகனை மிஞ்சும் அப்பா

ஜிகே ரெட்டி உடற்பயிற்சி செய்வதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் மிகவும் பிரபலமானவர் . இந்தப்படத்தில் மகனை மிஞ்சும் அப்பாவைப் போல - நடிகர் விஷால் சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்துவதைவிட அப்பா ஜிகே ரெட்டி அதி பயங்கரமாக சண்டைக்காட்சிகள் செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்பா மகன் கதை கொண்ட பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. இந்த படம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X